ஈழத்துக் கவிதை முயற்சிகள், இதழ்கள், நூல்கள் -சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 7 அத்தியாயம் 3. கவிதை தொடர்ச்சி 2 இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை பற்றிப் பேசுகையில் மொழிபெயர்ப்பு முயற்சிகளைத் தனியாகக் குறிப்பிடுவது பொருத்தமாகும். பல்வேறு மொழிகளில் இருந்து ஏராளமான கவிதைகள் இக்காலப் பகுதியில் இலங்கைக் கவிஞர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. கலைநோக்கில் இருந்து சமூகநோக்குவரை ஈழத்துத் தமிழ்க்கவிதை பரிணமித்ததை மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் நாம் காணலாம். 1940 ஆம் 50 ஆம் ஆண்டுகளில் குறிப்பிட்ட சமூக நோக்குபற்றிய பிரக்ஞையின்றி இலக்கியச் சுவையின் அடிப்படையில் பிறமொழிக் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டன….
இலங்கைத் தமிழ்க் கவிதையில் தோன்றிய புதிய அலை -சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 6 அத்தியாயம் 3. கவிதை தொடர்ச்சி 1960 ஆம் ஆண்டுகள் இலங்கைத் தமிழ்க் கவிதையைப் பொறுத்தவரை பிறிதொரு வகையில் முதன்மையான காலப் பிரிவாகும், சமூக விழிப்புணர்வும் முற்போக்குச் சிந்தனையும் தமிழ்க்கவிதையின் தலைமைப் போக்காக மாறிய காலப்பிரிவும் இதுவே. 50 ஆம் ஆண்டுகளில் குறிப்பாக 1956 ஆம் ஆண்டின் அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து புதினம், சிறுகதை, திறனாய்வுத்துறைகளில் முற்போக்குச் சிந்தனை முதன்மை இடம் பெறத் தொடங்கியது. ஆனால் கவிதையைப் பொறுத்தவரை 60 ஆம் ஆண்டுகள், அதிலும் குறிப்பாக…
இருபதாம் நூற்றாண்டு இலங்கைத் தமிழ்க்கவிதை – சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 5 அத்தியாயம் 3. கவிதை இருபதாம் நூற்றாண்டு இலங்கைத் தமிழ்க்கவிதை என்று பேசும்போது நவீனத் தமிழ்க் கவிதையையே நாம் முதன்மையாகக் கருதுகின்றோம். ‘நவீன தமிழ்க்கவிதை அல்லது ‘தற்காலத் தமிழ்க்கவிதை’ என்ற ஒரு தொடரை இப்போதெல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்துகின்றோம். பழைய, பண்டித மரபு வழிப்பட்ட நிலப்பிரபுத்துவ வாழ்க்கை அம்சங்களை உள்ளடக்கமாகக் கொண்ட பிரபந்த இலக்கிய வகைகளிலிருந்து மாறுபட்டு,நிகழ்கால வாழ்க்கை நிலைமைகளையும், அதன் அடிப்பிறந்த வாழ்க்கை நோக்குகளையும் கருத்தோட்டங்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட கவிதைகளையே நவீனக் கவிதை…