ஈழ மாணவர் சுட்டுக்கொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகை – மே 17
யாழ் பல்கலைக்கழக மாணவர் இருவரை சிங்களப் பேரினவாதக் காவல்துறை சுட்டுக்கொலை செய்திருக்கிறது. ஈழ மாணவர் எழுச்சியே 2009 இனப்படுகொலைக்குப் பின்பான அரசியலில் முதன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டார்கள், மாவீரர் விளக்குகள் விடுதலைக் கனலாய் பல்கலைக்கழக வளாகத்தில் முளைத்திருந்தன. தொடர்ந்து சிங்களப் பேரினவாதத்தின் முயற்சிகளுக்கு எதிராய்ப் போராட்டங்களும், மோதல்களும், முழக்கங்களும் யாழ் பல்கலைக்கழகத்திலேயே பிறந்தன. இந்தப் பின்புலத்திலிருந்தே இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. யாழ் மருத்துவமனையில் இந்திய அமைதிப்படை நடத்திய கோரமான படுகொலையின் 29ஆவது நினைவு நாள் இன்று. இந்த நிலையில் இந்தப்படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. பன்னாடுகளின் தோல்வியும், அமெரிக்கத் தீர்மானத்தின்…
ஒன்பது மாவட்ட மீனவர்கள் கைது!
இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்ட ஒன்பது மாவட்ட மீனவர்கள் கைது! தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவதைக் கண்டித்தும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், சிறைப்பிடித்து வைத்துள்ள விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும், அமைதியாக மீன் பிடிக்க உறுதி அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம், காரைக்கால், சிவகங்கை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை பிப்ரவரி 29, 2016…
இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்! மீனவர்கள் வேலைநிறுத்தம்
இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்! புதுக்கோட்டை மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மாசி 17, 2047 / 29.02.2016 அன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவதைக் கண்டித்தும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், சிறைப்பிடித்து வைத்துள்ள விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்தும் நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம், காரைக்கால், சென்னை,…