இலக்கியவீதியின் ‘மறுவாசிப்பில் சுசாதா’
அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ஆவணி 04, 2046 / ஆகத்து 21, 2015 அன்று ‘மறுவாசிப்பில் சுசாதா’ நிகழ்வுக்கு உறவும் நட்புமாக வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.. என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்
இனம் … ஈனம் : ‘தின இதழின்’ சரியான கணிப்பு
இட்லரால் யூதர்கள் அநியாயமாக அழிக்கப்பட்ட காலக்கட்டத்தின் அடிப்படையில் அந்த யூத மக்களை வைத்தே மூளை வளர்ச்சி இல்லாத ஒரு யூத இனக் கதாபாத்திரம், ஆட்டம் பாட்டம் கூத்து, மற்றும் போர்க் காலத்திலும் கூட அவர்கள் மகிழ்ச்சியாகவே இருந்தார்கள் என்று இன்று கூட யாராவது நகைச்சுவையாக ஒரு படம் எடுக்க முடியுமா? சும்மா விடமாட்டார்கள் யூதர்கள். ஆனால் ஈழத்தமிழர்களை வைத்து அப்படி ஒரு படம் எடுத்து, இதிலிருக்கும் உள்வஞ்சகம் தெரியாத நம்மில் சிலரையே, அதைப் பார்த்துச் சிரிக்கவும் வைக்கும் தந்திரத்தை செய்கிறது இந்தப் படம். …