தோழர் தியாகு எழுதுகிறார் : வலியறிதல்
(தோழர் தியாகு எழுதுகிறார் : சியான் நிகழ்ச்சி- தொடர்ச்சி) வலியறிதல் ”வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல்.”– திருக்குறள் 471 அன்பர் மருது ”தேர்தல் பாதை திருடர் பாதை” என்று சொல்லவில்லை. தேர்தல் என்கிற குடியாட்சிய வடிவத்தை மறுதலிக்கவில்லை. தேர்தலைப் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு வலிமையான சக்திகளாகப் புரட்சிகர இடதுசாரிகள் இல்லை என்பதுதான் மருதுவுக்குள்ள கவலை. மெய்ந்நடப்பில் நமது ஆதரவோ எதிர்ப்போ தேர்தல் களத்திலே தீர்மானிக்கும் சக்தியாக இல்லை என்பதுதான் அவருக்குள்ள வருத்தம். இந்தச் சூழலில் ஒற்றுமை (ஐக்கிய) முன்னணித் தந்திரத்தைப் பேசுவதால்…
தோழர் தியாகு எழுதுகிறார் 79 : இலெனின் சுப்பையா
(தோழர்தியாகுஎழுதுகிறார் 78 தொடர்ச்சி) இலெனின் சுப்பையா என்று சொன்னால் எங்கள் விடுதலைக் குரல் என்று சொல்வோம்! 1985 நவம்பர்க் கடைசியில் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த நேரம் நண்பராகக் கிடைத்த இளம் வழக்கறிஞர் திரு இராசுகுமார். சட்ட சமூக ஆராய்ச்சி மையம் என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். அவருக்காக மொழிபெயர்ப்பு போன்ற சிலவற்றில் உதவுவேன். சிறைப்பட்டோர் விடுதலை தொடர்பான சில வழக்குகளை அவரிடம் கொடுத்து நடத்தச் சொல்வேன். இராசுகுமார் வழியாக எனக்கு அறிமுகமானவர்தான் தோழர் இலெனின் சுப்பையா. சென்னையிலும் புதுவையிலும் மனிதவுரிமை தொடர்பான நிகழ்வுகளில் பாடுவார். அவை கருத்துச் செறிவுமிக்க பாடல்களாக இருக்கும். அவரே பாடல்…
தோழர் தியாகு எழுதுகிறார் 78: இலெனினைப் படிப்போம்!; பயில்வோம்!
(தோழர்தியாகுஎழுதுகிறார் 77 தொடர்ச்சி) இலெனினைப் படிப்போம்! இலெனினைப் பயில்வோம்! இலெனின் தேசத் தன்-தீர்வுரிமை குறித்து என்ன எழுதினார், எப்படி விளக்கினார் என்பதையெல்லாம் விரிவாகப் பார்ப்பது கதிரவனுக்காகவே அன்று. அக்கறை கொண்ட அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். பாட்டாளி வகுப்பின் நலன் பற்றிப் பேசிக் கொண்டே தேசிய இனச் சிக்கலில் இந்திய ஆளும் வகுப்பின் ஒடுக்குமுறைக் கொள்கைக்கு வால் பிடிக்கும் பாரத பக்த இடதுசாரிகள் எப்படியெல்லாம் இலெனினைத் திரிக்கின்றார்கள்? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த இடதுசாரிகள் இலெனினுக்குச் சிலை வைக்கிறார்கள் என்று செய்தி வந்த…
தோழர் தியாகு எழுதுகிறார் 76 : மொழியும் மொழிவழித் தேசியமும்
தோழர் தியாகு எழுதுகிறார் 75 தொடர்ச்சி வரலாற்றில் மொழியும் மொழிவழித் தேசியமும் [வருக்கம் என்ற சொல்லுக்குப் பழகியவர்கள் கீழே நான் வகுப்பு என்று சொல்வதை வருக்கம் என்று புரிந்து கொள்ள வேண்டுகிறேன். வருக்கப் போராட்டம் என்பதையே வகுப்புப் போராட்டம் என்கிறேன்.] “தேசிய இனங்களின் தன்-தீர்வுரிமை” என்ற தலைப்பில் இலெனின் எழுதிய நூலிலிருந்து ஒரு நீண்ட மேற்கோளை அன்பர் கதிரவன் திரைப்பிடியாக எடுத்து அனுப்பியிருந்தார். இந்த மேற்கோளின் கருத்தை சரிவரப் புரிந்து கொள்ள வேண்டுமானால் நூல் எப்பொருள் குறித்தானது? குறிப்பிட்ட மேற்கோளின் இடம்பொருள்ஏவல் என்ன? அதன்…
தோழர் தியாகு எழுதுகிறார் 74: நமக்கொரு 47 (!?)
(தோழர் தியாகு எழுதுகிறார் 73 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! இது 47ஆம் தாழி மடல். 47! பெயர் போலவே எண்ணும் ஓர் அருவக் குறியீடு. பருப்பொருளின் இருத்தல் வடிவங்களில் ஒன்று. பொருண்மைக்கு அப்பால் அதற்கொரு பொருள் இல்லை. இது இராசி எண், இது இராசியில்லாத எண் என்பதெல்லாம் மூடத்தனம். 100 என்ற எண் அகவையைக் குறிக்கும் போது முதுமையைக் குறிப்பதால் மருளச் செய்கிறது. மதிப்பெண்ணைக் குறிக்கும் போது வெற்றியைக் குறிப்பதால் மகிழச் செய்கிறது. 47 என்ற எண் ஆண்டைக் குறிக்கும் போது 1947! வரலாற்றில் முக்கிய ஆண்டுகளில் ஒன்று! இரவில் வாங்கினோம் விடியவே இல்லை என்ற நறுக்குக்கு இலக்கான இந்திய விடுமையைக்…
தோழர் தியாகு எழுதுகிறார் 29: ஏ. எம். கே. (8)
(தோழர் தியாகு எழுதுகிறார் 28: தொடர்ச்சி) ஏ. எம். கே. (8) புதிர் முறுவல் திருச்சி மத்தியச் சிறையில் 1974 செட்டம்பர் 25ஆம் நாள் தோழர் பாலகிருட்டிணன் தூக்கிலிடப்பட்ட போதும் அதன் பிறகும், நானும் இலெனினும் அதே சிறையின் முதன்மைக்கண்டத்தில் வைக்கப்பட்டிருந்தோம். எங்களோடு அதே கண்டத்தில் பத்துக்கு மேற்பட்ட ‘நக்சலைட்டு’ தோழர்களும் மற்றவர்களும் அடை பட்டிருந்தார்கள். நானும் இலெனினும் பாலுவை இழந்த பெருந்துயரிலிருந்து மீண்டு, எங்கள் அடுத்த பணிகள் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தோம். வரலாற்றுப் புகழ் படைத்த மேத் திங்கள் போராட்டத்துக்குப் பின் கொடிய அடக்குமுறையால் கலைந்து போன சிறைப்படுத்தப்பட்டோர் நலவுரிமைச் சங்கத்தை மறுபடியும் கட்டுவது…
தோழர் தியாகு எழுதுகிறார் 5
(தோழர் தியாகு எழுதுகிறார் 4 தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 5 பாலியலும் புரட்சிக்கான ஊக்கமும் பாலியல் சிக்கல்களில் புரட்சிக்குள்ள அக்கறைக்கு என்ன அடிப்படை? கிளாராவிடம் விளக்கிச் சொல்கிறார் மா இலெனின்: “புரட்சிக்குக் கவனக் குவிப்பு தேவை, ஆற்றல் பெருக்கம் தேவை. மக்கள் திரளிடமிருந்தும் தனியாட்களிடமிருந்தும் தேவை. டி’அனுன்சியோவின் சீரழிந்த நாயகர்களுக்கும் நாயகிகளுக்கும் இயல்பானவை என்னும் படியான களியாட்ட நிலைமைகளைப் புரட்சியால் சகித்துக் கொள்ள முடியாது. பாலியல் வாழ்வில் ஒழுங்கீனம் என்பது முதலாண்மைத்துக்குரியது, அது சீரழிவின் வெளிப்பாடு.” [கேப்ரியல் டி‘அனுன்சியோ இத்தாலியக் கவிஞர், எழுத்தாளர்,…
தோழர் தியாகு எழுதுகிறார் 2
(தோழர் தியாகு எழுதுகிறார் 1 தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 2 காதல் விடுமையா? பாலியல் விடுமையா? கிளாரா செட்கினுடன் பாலியல் சிக்கல்கள் குறித்து உரையாடுகிறார் மா இலெனின். இந்த உரையாடலின் போக்கில்தான் “கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடு” எனும் பாலியல் விடுமைக் கொள்கை பற்றிப் பேசுகிறார். இளைஞர்கள் பலரும் தாங்கள் நம்பும் பாலியல் விடுமைப் போக்குதான் புரட்சியமானது என்று நம்புகின்றனர். இதுதான் பொதுமைத் தனமானது (கம்யூனிசுட்டுகளுக்குரியது) என்றும் புரிந்து கொள்கின்றனர். இலெனின் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. எம்மைப் போன்ற [அல்லது நம்மைப் போன்ற?]…
தோழர் தியாகு எழுதுகிறார் 1
தோழர் தியாகு எழுதுகிறார் – முன்னுரை இனிய அன்பர்களே! தாழி மடலுக்கு நான் எந்த வரம்பும் வைத்துக் கொள்ளவில்லை. இந்த ஊடகம் இடமளிக்கும் வரை உள்ளடக்கத்தை விரிவாக்கிக் கொள்ள முடியும். தாழி மடலில் தன்வரலாறு, பிறர் வரலாறு, தன்னாட்டு வரலாறு. பன்னாட்டு வரலாறு, பொருளியல், அரசியல், மெய்யியல், கலை இலக்கியம், ஐயந்தெளித்தல், ஐயந்தெளிதல் இன்னும் என்னவெல்லாம் முடியுமோ இடம்பெறச் செய்வோம். சுவருக்குள் சித்திரங்கள், கம்பிக்குள் வெளிச்சங்கள், விலங்கிற்குள் மனிதர்கள் … இவற்றின் தொடர்ச்சியாக எழுத வேண்டியவை ஏராளம். சொல்லடித்தல் என்று நான் குறிப்பிடும் புதிய…
அரசின் கல்விக்கொள்கை இலெனின்கள் உயிர்களைப் பறிக்கின்றது! உள்ளம் தவிக்கின்றது! -இலக்குவனார் திருவள்ளுவன்
அரசின் கல்விக்கொள்கை இலெனின்கள் உயிர்களைப் பறிக்கின்றது! உள்ளம் தவிக்கின்றது! அனைவருக்கும் கல்வி தருவது அரசின் கடமை. ஆனால், கல்வி வணிகமயமாக்கப்பட்டதால் கற்போர் பெரும்பாடு படவேண்டியுள்ளது. பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப் பாரை உயர்த்திட வேண்டும் என்கிறார் பாரதியார். ஆனால் பாரை உயர்த்துவதாகக் கூறும் அரசாங்கங்கள், கட்டணமில்லாக் கல்வியைத் தர மறுக்கின்றனவே! கல்லா ஒருவரைக் காணின் கல்வி நல்காக் கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம் எனக் கனவு கண்டார் பாரதிதாசன். ஆனால், கல்வியை வணிகக் கொள்ளையரிடம் ஒப்படைத்துவிட்டுக், கற்பவர்க்குத் தூக்குமரத்தைக் காட்டுகின்றனரே!…