சிலப்பதிகாரப் பெருவிழா 2017
(படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.) “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணீயாரம் படைத்த தமிழ்நாடு” எனப் பாரதியார் போற்றிய சிலப்பதிகாரத்தை உலகெல்லாம் பரப்பும் நோக்கத்துடன் சிலம்பொலி சு.செல்லப்பனார் சிலப்பதிகார அறக்கட்டளை என்னும் அமைப்பை 2014-ஆம் ஆண்டு நிறுவினார். சிலப்பதிகாரத்தைப் பரப்புதற்கு மாநாடுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்திடுதலும் சிலப்பதிகாரத்திற்குத் தொண்டாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் “இளங்கோ விருது”வழங்குதலும் இந்த அறக்கட்டளையின் செயல்முறைகளுள் அடங்கும். 2014-இல் சென்னையிலும் 2015-இல் நாமக்கல்லிலும் சிலப்பதிகார மாநாடுகள் நடைபெற்றன. 2016 & 2017-ஆம் ஆண்டுக்கான இளங்கோ விருதுகளும் இளைய சிலம்பொலி விருதுகளும்…
சிலப்பதிகாரப் பெருவிழா, சென்னை
அன்புடையீர், வணக்கம். மாசி 15, 2048 / திங்கட்கிழமை / 27-02-2017 காலை 10 மணி முதல் மதியம் 1. 30 மணிவரை, முனைவர் எம்ஞ்சிஆர். சானகி மகளிர் கலை- அறிவியல் கல்லூரி அரங்கில், சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை – முனைவர் எம்ஞ்சிஆர். சானகி மகளிர் கலை -அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் சிலப்பதிகாரப் பெருவிழா நடைபெறவுள்ளது. நீதியரசர் வள்ளிநாயகம், நயவுரைநம்பி முனைவர் செகத்துரட்சகன், நாடாளுமன்ற உறுப்பினர் மாண்பமை திருச்சி சிவா,பழனி சி. பெரியசாமி, தாளாளர் திருமதி இலதா இராசேந்திரன், கவிப்பேரருவி…
சிலப்பதிகாரப் பெருவிழா – இளங்கோ விருது வழங்கு விழா
நாமக்கல் புரட்டாசி 24, 2046 / அக்.11, 2015 ஞாயிறு காலை 9.15-இரவு 8.30 (சொடுக்கிப் பெரிதாகக் காண்க.)
சிலம்பொலிச்செல்லப்பன் அவர்களின் 85 ஆம் பிறந்தநாள் விழா – இளங்கோ விருது வழங்கல்
புரட்டாசி 5, 2045 / 21.09.2014 : தமிழறிஞர் சிலம்பொலிச்செல்லப்பன் அவர்களின் 85 ஆம் அகவை நிறைவை யொட்டிச், “சிலப்பதிகாரப் பெரு விழா’’ எனும் விழா சென்னை ஏ.வி.எம். இராசேசுவரி அரங்கில் நடைபெற்றது. காலையில், பிறந்த நாளை முன்னிட்டுச் சிலப்பதிகார அறக்கட்டளையை, தி.மு.க. பொதுச்செயலர் பேராசிரியர் க.அன்பழகன் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் சிலப்பதிகார அறக்கட்டளையின் சார்பில் தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு, “இளங்கோ விருதினை’’ நீதியரசர் அரு.இலக்குமணன் அவர்கள் வழங்கினார். விருதுடன் ‘பூம்புகார் சிற்பி’ என்ற பட்டமும், ஓர் இலட்ச உரூபாய்க்கான பொற்கிழியும் வழங்கப்பட்டன….