தமிழரும் காவிரியும், கருத்தரங்கம், திருச்சிராப்பள்ளி
புரட்டாசி 23, 2017 / அட்டோபர் 09, 2016 மாலை 5.00
இலங்கை அரசே! இராணுவத்திடம் சரணடைந்த எமது தமிழ் உறவுகள் எங்கே? – கவனயீர்ப்பு ஒன்றுகூடல்
அனைத்துலகக் காணாமற்போனோர் நாளில் (ஆகத்து 30) ஈழத் தமிழருக்கு நீதிகோரி காலை 10:30 மணிக்கு, அடையாறு ஐ.நா. (கஅபபஅ /யுனெசுகோ) அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஒன்றுகூடல். இலங்கை அரசே! இராணுவத்திடம் சரணடைந்த எமது தமிழ் உறவுகள் எங்கே? அனைத்துலகக் காணாமற்போனோர் நாள் (International Day of the Disappeared) ஒவ்வோர் ஆண்டும் ஆகத்து 30 ஆம் நாள் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகின்றது. கோசுடோரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமல் போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associations for Relatives of…
காணாமல் போன தமிழர்களின் அடையாளங்கள் – வைகை அனிசு
காலமாற்றத்தால் காணாமல் போன தமிழர்களின் அடையாளங்கள் தமிழகத்தின் தனித்த அடையாளங்களாக உலகம் முழுவதும் அறியப்படுபவை கலையும் இறைமையும். குறிப்பாகக் கோயில் கட்டடக்கலை இன்று வரை உலகினை ஈர்க்கும் முதன்மைக் கூறாக உள்ளது. இயற்கைச் சீற்றங்களாலும், அயலவர்களின் படையெடுப்பாலும் அழிந்து போனவை தவிர்த்து, காலத்தைத் தின்று செரித்து இன்றும் நம்முன் நின்று கொண்டிருக்கும் வரலாற்றுக் கால கட்டடங்கள் நம் பெருமையைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு கலைப் பண்பு நிறைந்த கோயில்களில் இறைவனுக்கு ஊழியம் செய்ய ஆண்களும், பெண்களும் இருந்துள்ளனர். அவர்கள் தேவ அடியார்…
மலையகத் தமிழர்: பறிக்கப்பட்ட உரிமைகளும் – பேசப்படாத வரலாறும்
அரங்கக்கூட்டம்: மலையகத் தமிழர்: பறிக்கப்பட்ட உரிமைகளும் – பேசப்படாத வரலாறும் கார்த்திகை 6, 2045 – 23 நவம்பர் ஞாயிற்றுக்கிழமை | மாலை 4.30 மணி – இக்சா அரங்கம் (4ஆவது தளம்) கன்னிமாரா நூலகம் எதிரே ,எழும்பூர் ,சென்னை தோழர்களுக்கு , வணக்கம்! கடந்த அக்டோபர் மாதம் 29 அன்று இலங்கையின் உவா மாகாணத்தில் உள்ள பதுளை மாவட்டத்தில் மிறீயபெத்த பகுதியில் கடும்மழை காரணாமாக ஏற்பட்ட நிலச்சரிவில் மலையகத் தமிழர்கள் ஏறக்குறைய 200 பேர்…
தமிழக இயற்கை வளங்களும் நமது எதிர்காலமும் – கருத்தரங்கம் – மதுரை
தமிழக இயற்கை வளங்களும் நமது எதிர்காலமும் – கருத்தரங்கம் – மதுரை – ஆவணி 15, 2045 / ஆக.31, 2014 ஞாயிறு மாலை 4 மணி வணக்கம். இளந்தமிழகம்இயக்கம் சார்பாக மதுரையில் வரும் 31 ஆகத்து ஞாயிறு மாலை 4 மணிக்கு .’தமிழகஇயற்கை வளங்களும் நமது எதிர்காலமும்’என்ற தலைப்பில் கருத்தரங்கம்திட்டமிடப்பட்டுள்ளது. இடம்: புத்தகக் காட்சி, தமுக்கம் மைதானம், மதுரை இந்திகழ்வில் கலந்து கொள்ளுமாறு தங்களையும் அழைக்கின்றோம் நன்றி இளங்கோவன்.ச செய்தித் தொடர்பாளர், இளந்தமிழகம்