தமிழரை வலிமை கொள்ளச் செய்குவாய்! – நாமக்கல் கவிஞர்
5,6/6 இளந்தமிழனுக்கு ஓடி ஓடி நாட்டி லெங்கும் உண்மை யைப்ப ரப்புவாய்; ஊன மான அடிமை வாழ்வை உதறித் தள்ள ஓதுவாய்; வாடி வாடி அறம்ம றந்து வறுமைப் பட்ட தமிழரை வாய்மை யோடு தூய்மை காட்டும் வலிமை கொள்ளச் செய்குவாய்; கூடிக் கூடிக் கதைகள் பேசிச் செய்கை யற்ற யாரையும் குப்பை யோடு தள்ளி விட்டுக் கொள்கை யோடு நின்றுநீ பாடிப் பாடித் தமிழின் ஓசை உலக மெங்கும் பரவவே பார்த்த யாரும் வார்த்தை கேட்டுப் பணியு மாறு சேவைசெய். 5 தமிழ னென்ற…
தமிழ்மொ ழியால் ஓதி நீ தொண்டு செய்! – நாமக்கல் கவிஞர்
3,4 / 6 இளந்தமிழனுக்கு அன்பி னோடும் அறிவு சேர்ந்த ஆண்மை வேண்டும் நாட்டிலே; அச்ச மற்ற தூய வாழ்வின் ஆற்றல் வேண்டும் வீட்டிலே. இன்ப மான வார்த்தை பேசி ஏழை மக்கள் யாவரும் எம்மு டன்பிறந்த பேர்கள் என்ற எண்ணம் வேண்டும். துன்ப மான கோடி கோடி சூழ்ந்து விட்ட போதிலும் சோறு தின்ன மானம் விற்கும் துச்ச வாழ்வு தொட்டிடோம்! என்ப தான நீதி யாவும் இந்த நாட்டில் எங்கணும் இளந்த மிழா! என்றும் நின்றே ஏடெ டுத்துப் பாடுவாய்! 3 …
தமிழகம் அடிமைப் பட்டு மதிமயங்கி நிற்பதேன்? – நாமக்கல் கவிஞர்
1,2/6 இளந்தமிழனுக்கு இளந்த மிழா! உன்னைக் காண இன்ப மிகவும் பெருகுது! இதுவ ரைக்கும் எனக்கிருந்த துன்பம் சற்றுக் குறையுது! வளந்தி கழ்ந்த வடிவி னோடும் வலிமை பேசி வந்தனை. வறுமை மிக்க அடிமை நிற்கு வந்த ஊக்கம் கண்டுநான் தளர்ந்தி ருந்த சோகம் விட்டுத் தைரி யங்கொண் டேனடா! தமிழர் நாட்டின் மேன்மை மீளத் தக்க காலம் வந்ததோ! குளிர்ந்த என்றன் உள்ளம் போலக் குறைவி லாது நின்றுநீ குற்ற மற்ற சேவை செய்து கொற்ற மோங்கி வாழ்குவாய்! 1 பண்டி ருந்தார் சேர…