உலகத் தொல்காப்பிய மன்றம், குளித்தலை, தொடக்க விழா

  தமிழ்ப்பேரவை, குளித்தலை திங்கள்நிகழ்வு 21 உலகத் தொல்காப்பிய மன்றம், கரூர் மாவட்டக் கிளை, தொடக்க விழா  வைகாசி 01, 2047 –  21.05.2016 சனிக் கிழமை மாலை 5.30 மணிக்குக் குளித்தலையில் அமைந்துள்ள கிராமியம் அரங்கில் (பேருந்து நிலையம் அருகில்) உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கரூர் மாவட்டக் கிளை தொடக்க விழா நடைபெற உள்ளது. முனைவர் கடவூர் மணிமாறன், பாட்டரசர் கி. பாரதிதாசன், பொறிஞர் சு.சக்திவேல் மரு. பி. நாராயணன், புலவர் உ. தண்டபாணி, திரு. ப.சிவராசு, முனைவர் ப.பத்மநாபன், முனைவர் மு.இளங்கோவன்,…

திருவள்ளுவர் நினைவுநாள் – திருச்சிராப்பள்ளி

நண்பர்களே! வணக்கம். மாசி 13, 2047 / 25.02.2016 மாலை, 6.00 மணி திருச்சி பெரியசாமி வணிகவளாகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் திருவள்ளுவர் நினைவுநாள் நிகழ்வு. திருவள்ளுவர் மறைந்த நாளாக மாசித்திங்கள் உத்தர நட்சத்திரம் கருதப்படுகிறது. தலைமை: திருக்குறள் சு முருகானந்தம் முன்னிலை: முனைவர் ச திலகவதி, இலக்கியத்துறைத்தலைவர் தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர். அகத்தியர் புத்தகசாலை கோபாலகிருட்டிணன். சிறப்புரை : இ.சூசை தலைப்பு : பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். என். நிசவீரப்பா. காங்கிரசு தலைமைக்கழகப் பேச்சாளர் தலைப்பு :  நவில்தோறும் நூல்நயம் வரவேற்பு: இரா…

சதுரகராதி அறிமுக உரை – தமிழ் சூசை

இனிய நண்பர்களே, வணக்கம்.    எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5 30. மணி, மாசி 08, 2047 – 20 02 2016 திருவரங்கம் இராசவேலர் செண்பகத்தமிழரங்கில் இலக்கணத்தொடரில் சதுரகராதி அறிமுக உரை உள்ளது. உரிச்சொல் பனுவல் காலம்,  நிகண்டுகாலம், அகராதிகாலம், சதுரகராதி அமைப்பு, சதுரகராதி சிறப்பு என உரை தயாரித்து உள்ளேன். வாய்ப்புள்ள மாணவர்கள், நண்பர்கள் வருக! – தமிழ் சூசை

பழமொழியில் விளைந்த கனிகள் – இ. சூசை

காண்ஒளி வந்தபின்னும் வானொலி விருமபும் நேயர்களே! வணக்கம்.   தமிழின் வாழ்வில் பட்டறிவில் விளைந்தவை பழமொழிகள். முன்னோர் கூறிய பழமொழிகள் நம்மை நெறிப்படுத்தும்   உயர்பண்பாளர்கள் ஒருபோதும் அழிசெயல்திட உடன்படமாட்டார்கள். கடுங்கோபம் வந்தாலும் சான்றோர் வைதாலும், தீய செயல்களைச் செய்திட உடன்பட மாட்டார்கள். உயர்பண்பு இல்லாத இழிந்தோர் தீங்கு செய்யும்போது ஆத்திரம் வரும். மாண்போடு பிறந்து வாழ்ந்தவர்கள் கோபப்படுவதில்லை. . இதனைப், பழமொழி நானூறு(51), “நல்ல விறகிலும் அடினும், நனி வெந்நீர் இல்லம் சுடுகலா வாறு” என்கிறது. நிறைய, தரமான விறகினால் சூடேற்றினாலும், தண்ணீர்…

கலித்தொகையின் கவின்மிகு சிந்தனை – இ. சூசை

  இளங்காலைப் பொழுதில் சுறுசுறுப்புடன் இயங்கும் வானொலி நேயர்களே! வணக்கம். நம் முன்னோர்கள் காதல் இலக்கியங்களில் கூட அறம் உணர்த்திய ஆன்றோர்கள் ஆவர். கலித்தொகை என்ற கவின்மிகு இலக்கியத்தில் இதனை நுகர முடிகிறது. தலைவன் பொருளுக்காகப் பிரிந்து செல்கிறான். தலைவி வாடுகிறாள். அப்போது தோழி சொல்கிறாள். “இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இளிவு” ஒரு ஆண்மகனிடம், “இல்லை! ஈகை செய்யுங்கள்” எனக் கேட்கும்போது அவன் “இல்லை” என வறுமையில் வாடுவது அவனுக்கு இழிவு. உன் தலைவன் உழைத்துப் பொருள் ஈட்டட்டும் என்கிறாள். “இடன்…

கல்லாடம் கூறும் வாழ்வியல் நெறி – இ. சூசை

புலர்காலைப் பொழுதில் சிராப்பள்ளி வானொலியின் செவிநுகர் கனிகளைக் கேட்டுப் புத்தறிவு பெறும் நேயர்களே! வணக்கம். பதினோராம் நூற்றாண்டில் தமிழில் தோன்றிய ஒப்பற்ற அகநூல் கல்லாடம் சிவபெருமானின் பெருமைகளை, பாண்டிய மன்னனின் சிறப்புகளை இடைஇடையே நுட்பமாகச் செரித்துக் கூறும் இலக்கியம். வருணணை, உவமை, உருவகங்களில் வாழ்வியல் மெய்ம்மைகளைக் கல்லாடம் கூறுகிறது. ‘கல்லாடம் கற்றவரோடு சொல்லாடல் கொள்ளாதே! எனக் கற்றவரையே எச்சரிக்க வேண்டிய கருத்து வளம், உடையது கல்லாடம். கல்லாடம் என்பது ஊர்ப்பெயர், கல்லாடர் ஆசிரியர் பெயர் கல்லாடம் நூலுக்கு ஆகுபெயராக ஆயிற்று. நேயர்களே! நமக்கு உதவி…

திருக்குறள் குமரேச வெண்பாவின் அறக்கதைகள் – இ. சூசை

திருக்குறள் குமரேச வெண்பாவின் அறக்கதைகள்     இளங்காலைப் பொழுதில் புதுப்பொலிவோடு செயல்களைத் தொடங்கும் வானொலி நேயர்களே! வணக்கம்.   இன்றைக்குச் சற்றேக் குறைய நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தலை சிறந்த தமிழ் இலக்கிய ஆய்வாளர் செகவீரபாண்டியனார். கவிராசப் பண்டிதர் என்று உலகம் அவரை அழைத்தது. தூத்துக்குடியில் 1920-களில் தொடங்கி  வாழ்ந்தவர். அன்றைய ஆங்கில அரசு அவரின் நூல்களைப் பாடநூலாகக் கல்வி நிறுவனங்களில் வைத்தது. அன்றைய தமிழ் கூறும் உலகில் அவர் புகழோடு இருந்தார். கம்பஇராமாயணத்தை ஆராய்ந்து, கம்பன் கலைநிலை என்று பல…

சிலப்பதிகார விழா – கருத்தரங்கம்

ஆனி 13, 2046 / சூன் 28, 2015  ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மருதம் அரங்கு,  திருச்சிராப்பள்ளி தென்னகக் கலை இலக்கிய வளர்ச்சிக் குழு