பண்பாட்டு உணவுத் திருவிழா – பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி
அன்புடையீர், வணக்கம். நமது பள்ளியில் ஆண்டு தோறும் நடைபெறும் பண்பாட்டு உணவுத் திருவிழா இந்த ஆண்டு வரும் கும்பம் 3 (15-02-2015) ஞாயற்றுக் கிழமை அன்று நடைபெற உள்ளது. அழைப்பிதழை இணைத்துள்ளோம். உங்கள் வருகை விழாவைச் சிறப்பிக்கும். வாருங்கள். நன்றி! ச.வெற்றிச்செழியன் பாவேந்தர் தமிழ் வழிப் பள்ளி, குன்றத்தூர். 044 24782377,9840977343
இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 7
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 311. அளவைகளும் எடைகளும் பல்வேறு அளவைகளும், நிறைகளும் பயன்பாட்டில் கண்டயறிப்பட்டுள்ளன. பயன்பாட்டின் போது பெயர்களின் ஒலிகள் மாறுவது தொடர்பான விதிகளை அவர் ஒழுங்குபடுத்தியுள்ளார். (எழுத்து: நூற்பாக்கள் 164, 165, 166, 167, 168, 169, 171, 239, 240) 171 ஆம் நூற்பாவிலிருந்து அளவைகள், நிறைகளின் பெயர்கள் க, ச, த, ப, ந, ம, வ, அ, உ ஆகிய தொடக்க எழுத்துகளைக் கொண்டு உள்ளமை அறியலாம். உரையாசிரியர் நச்சினார்க்கினியார் பின்வருமாறு அவற்றின் பெயர்களைக் குறிப்பிடுகின்றார். அளவைகள்:…