(அதிகாரம் 022. ஒப்புரவு அறிதல் தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 023. ஈகை   ஏழையர்க்கு, வேண்டியன எல்லாம், கொடுக்கும் பயன்கருதாத் தனிக்கொடை.   வறியார்க்(கு)ஒன்(று) ஈவதே ஈகை,மற்(று) எல்லாம்,    குறியெதிர்ப்பை நீர(து) உடைத்து.  எதையும் எதிர்பார்க்காமல், ஏழையர்க்குக் கொடுப்பதே, ஈகை ஆகும்.     222.நல்ஆ(று) எனினும், கொளல்தீதே; மேல்உலகம்    இல்எனினும், ஈதலே நன்று.  நல்செயலுக்காக் கொள்வதும் தீதே; மேல்உலகு இல்எனினும், கொடு.  223. “இலன்”என்னும், எவ்வம் உரையாமை ஈதல்,    குலன்உடையான் கண்ணே உள. “இல்லாதான்”எனச் சொல்லும் முன்னர் ஈதல்,…