திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 023. ஈகை
(அதிகாரம் 022. ஒப்புரவு அறிதல் தொடர்ச்சி)
01.அறத்துப் பால்
02.இல்லற இயல்
அதிகாரம் 023. ஈகை
ஏழையர்க்கு, வேண்டியன எல்லாம்,
கொடுக்கும் பயன்கருதாத் தனிக்கொடை.
- வறியார்க்(கு)ஒன்(று) ஈவதே ஈகை,மற்(று) எல்லாம்,
குறியெதிர்ப்பை நீர(து) உடைத்து.
எதையும் எதிர்பார்க்காமல், ஏழையர்க்குக்
கொடுப்பதே, ஈகை ஆகும்.
222.நல்ஆ(று) எனினும், கொளல்தீதே; மேல்உலகம்
இல்எனினும், ஈதலே நன்று.
நல்செயலுக்காக் கொள்வதும் தீதே;
மேல்உலகு இல்எனினும், கொடு.
223. “இலன்”என்னும், எவ்வம் உரையாமை ஈதல்,
குலன்உடையான் கண்ணே உள.
“இல்லாதான்”எனச் சொல்லும் முன்னர்
ஈதல், நல்குலத்தாரிடமே உண்டு.
- இன்னா(து) இரக்கப் படுதல், இரந்தவர்
இன்முகம், காணும் அளவு.
பெறுவானின் மகிழ்முகம் காணும்
வரையில், இரக்கப்படலும் துன்பமே.
- ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல், அப்பசியை
மற்றுவார் ஆற்றலின் பின்.
பசிபொறுக்கும் ஆற்றல் பேர்ஆற்றல்;
பசிபோக்கும் ஆற்றலுக்குப் பின்அது.
226.அற்றார் அழிபசி தீர்த்தல், அஃ(து)ஒருவன்,
பெற்றான் பொருள்வைப்(பு) உழி.
பசித்த ஏழையின் வயிறுதான்,
செல்வத்தைச் சேமிக்கும் இடம்.
227. பாத்(து)ஊண் மரீஇ யவனைப், பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
பகுத்துக் கொடுத்து உண்பானைத்,
தீப்போன்ற சுடும்பசியும் தீண்டாது.
228. ஈத்(து)உவக்கும் இன்பம் அறியார்கொல்? தாம்உடைமை,
வைத்(து)இழக்கும் வன்க ணவர்.
கொடைஇன்பம் அறியாக் கொடியாரே
செல்வத்தை வைத்[து]இருந்[து] இழப்பார்.
229.இரத்தலின் இன்னாது மன்ற, நிரப்பிய,
தாமே தமியர் உணல்.
உணவை ஈயாது, தனித்[து]உண்ணல்
பிச்சை எடுத்தலினும் இழிவு.
230.சாதலின், இன்னாத(து) இல்லை; இனி(து)அதூஉம்,
ஈதல் இயையாக் கடை.
துன்பம்தான் சாவதும்; அதுவும்
இன்பம்தான் ஈய இயலாப்போது,
– பேராசிரியர் வெ. அரங்கராசன்
Leave a Reply