(ஊரும் பேரும் 48 : இரா.பி.சேது(ப்பிள்ளை): தளியும் பள்ளியும்- தொடர்ச்சி) ஊரும் பேரும் ஈச்சுரம்    ஈசன் என்னும் பெயராற் குறிக்கப்படுகின்ற சிவபிரான் உறையும் கோயில் ஈச்சுரம் எனப்படும். தேவாரப் பாமாலை பெற்ற ஈச்சுரங்கள் பல உண்டு. அவற்றுள் சிலவற்றைத் தொகுத்துரைத்தார் திருநாவுக்கரசர்.       “நாடகமாடிடம் நந்திகேச்சுரம் மாகாளேச்சுரம்       நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கான       கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம்       குக்குடேச்சுரம் அக்கீச்சுரம்” என்று கூறிச் செல்கின்றது அவர் திருப்பாசுரம். நந்தீச்சுரம்    இக் காலத்தில் மைசூர் என்று பெயர் பெற்றுள்ள எருமை…