என்னடா தமிழா !- ஈரோடு இறைவன்

என்னடா தமிழா ! மூளை ஆங்கிலத்தில் கிடக்குது ! நாக்கு ஆங்கிலத்தில் கிடக்குது ! உன் எழுத்து ஆங்கிலத்தில் கிடக்குது ! என்னடா தமிழா உன் தமிழ் எங்கே கிடக்குது ! – ஈரோடு இறைவன்

உயிரில் இரத்தம் வடியும் – – ஈரோடு இறைவன்  

முள்ளி வாய்க்காலில் வெந்து கிடக்கும் உடல் நெருப்பில் வேல் செய்யடா சிங்கள நரிக் கூட்டத்தின் உடல் கிழித்து தூள் செய்யடா மே 18இல் பாலச்சந்திரன் ஈகம் தூக்கி கண்ணீர் பெய்யடா அடிபட்ட புலி அடி கொடுக்கும் வரலாறு மெய்யடா உங்கள் மரண நினைவு இருக்கும் ஒவ்வொரு நொடியும் ஆனால் மே 18 இல் மட்டும் உயிரில் இரத்தம் வடியும் நினைவே நீங்களாய் இருக்கும்போது மறக்க முடியுமா? இனியாவது மனித இனமே ஈழம் விடியுமா?

உரிமை ! – ஈரோடு இறைவன்

விலங்கு வாழ்கிறது காட்டில் விடுதலையோடு! மீன் தண்ணீரில் வாழ்கிறது விடுதலையோடு ! புழு மண்ணில் வாழ்கிறது விடுதலையோடு ! தமிழா நீ வாழ்கிறாயா விடுதலையோடு !