ஈடில்லா மகள் ஈழமலர் ஈரைம்பது ஆண்டுகள் வாழியவே! 1/2

ஈடில்லா மகள் ஈழமலர் ஈரைம்பது ஆண்டுகள் வாழியவே!    தி.பி. 2018, கார்த்திகை 09 / கி.பி.1987 நவம்பர் 25 அன்று, நான் சைதாப்பேட்டைஅலுவலகத்தில் இருந்த பொழுது தம்பி அம்பலவாணன், ஈழமலர் பிறந்த தொலைவரிச் செய்தியை எடுத்து வந்திருந்தான். ஆம், பிறக்கும் முன்னரே ஈழமலர் எனப் பெயர் சூட்டியிருந்தோம். உயிர்க்கொடைப்போராளி திலீபனைப்பற்றியே பேசிக் கொண்டிருந்ததால், “ஆண் குழந்தை என்றால் திலீபன் எனப் பெயர் சூட்டுவீர்கள், பெண் குழந்தை என்றால் திலீபி என்று பெயர் வைப்பீர்களா” எனத் தம்பி கேட்டான். திலீபன் மட்டுமா? குட்டிமணி, செகன்…

இன்ஃபோசிசு பொங்கல்விழா

இன்ஃபோசிசு(மகநே்திர நகரில்) பொங்கல் விழாக் காட்சிகள்   செங்கல்பட்டு அருகே அமைந்த மகேந்திரநகரில் உள்ள இன்ஃபோசிசு நிறுவனத்தில் 21.01.14 செவ்வாய் அன்று தமிழர் திருநாளாகிய பொங்கல்விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  அன்று காலை அலுவலகத்திற்கு வந்த அனைவரையும் மேளதாளத்துடன் வரவேற்று உற்சாகமாக விழா தொடங்கப்பட்டது. பொங்கல்  வைப்புப் போட்டி, கோலப்போட்டி, பம்பரப்போட்டி, உறியடிப் போட்டி ஆகியனவற்றில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மாலை மதுரை ஐயா கலைக்கூடத்தினரின் தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், காளையாட்டம் முதலான நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.  அனைவரும் உற்சாகத்துடன்…