ஈழத் தாயவளேதான் எங்கள் தாயம்மா! – அம்பாளடியாள்
ஈழத் தாயவளேதான் எங்கள் தாயம்மா! ஆழ்கடல் தனிலே அந்தப் பேதையின் குரலைக் கேட்டேன்! ஊழ்வினைப் பயனாய் எண்ணி உலகமே வெறுக்கக் கண்டேன்! வாழ்வினை அளிக்க வல்ல வசந்தமும் விலகிச் செல்ல மூழ்கிடும் திருநா டெம்மின் முகவரி என்றார் அம்மா! பொன்னென விளைந்த தேசம் பொலிவினை இழக்க நாளும் இன்னலைத் தொடுத்தார் அங்கே இதயமும் மரித்துப் போக! அன்னவர் செயலைக் கண்டே அடிமைகள் விழித்த தாலே வன்முறை பொலிந்தே இன்றும் வாழ்வினைப் பொசுக்கு தம்மா! கற்றவர் நிறைந்த பாரில் காத்திட ஒருவர் இன்றி குற்றமே பொலிந்து…