தேவதானப்பட்டியில் விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படாமை
தேவதானப்பட்டிப் பகுதியில் பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படாமையால் ஏமாற்றம் தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள ஊராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் விலையில்லாக் கலவை, மின்னுரல், மின்விசிறி வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், கெ.கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டிப் பகுதிகளில் ஒருசார் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவில்லை. கடந்த தி.மு.க.ஆட்சியில் இலவச வண்ணத்தொலைக்காட்சி, இலவச வளியடுப்பு வாங்கியவர்களின் பெயர்களை மட்டும் வட்ட வழங்கல் அதிகாரிகள் கணக்கு எடுத்துப் பட்டியலை அனுப்பி உள்ளார்கள். அதன்படி விலையில்லாக் கலவை, மின்னுரல், மின்விசிறி ஆகியவை வந்துள்ளன. புதியதாகக் குடும்ப அட்டை பெற்றவர்கள்,…
இலக்குவனார் எழுதுகோல்-வீழாமல் காக்கும் ஊன்றுகோல்!
மண்ணுக்கும் பொண்ணுக்கும் பொன்னுக்கும் போராடும் மாந்தரிடை மொழிக்காய்ப் போராடி, தமிழர் இனமானம் காத்தபேரா சிரியர் இலக்குவனார் தனக்கு இலக்கு தமிழர் முன்னேற்றம் காசுபணம் விலக்கி நேர்மைத் திறத்தால் மாசிலா மனத்தால் போராடும் குணத்தால் ஓரிடம் நின்று பணியாற்ற வழியின்றி வேறுவேறு ஊர்கள் தோறும் சென்று காலத்தை வென்று சாதனை படைத்தவர்! கால்பதித்த இடமெலாம் தன்தடம் பதித்தவர்! கன்னித் தமிழை உயிராய் மதித்தவர்! செல்லும் இடமெலாம் தமிழ்முழக்கம் செய்ததால் செல்லரித்த மனங்கள் மலர்ந்தன! சோம்பிய இறகுகள் துடித்தன! சாம்பிய இமைகள் திறந்தன! தமிழை நினைந்து,…