திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் – மலர்
திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் மது அருந்தாமலே வாழ்ந்து முடித்தவனை மது நிரம்பிய மலர்களால் போர்த்தி இருந்தனர் அவன் அந்திமத்தில்! ++ பூவாங்கக் காசு போதாததால் அதை விற்கும் வேலையை வாங்கிக் கொண்டாள் ஏழைச் சிறுமி! ++ சிதைந்து உடன்கட்டை ஏறின இறந்தவருடன்… சாலையில் இறைக்கப்பட்ட மலர்கள்…! ++ வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்