நாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா? – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி
நாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா? இப்பொழுதெல்லாம் வலைத்தள ஊடகங்களில், குழந்தைக்குச் சூட்டுவதற்குத் தமிழில் நல்ல பெயர் பரிந்துரைக்குமாறு பலரும் அடிக்கடி கேட்கிறார்கள். பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது! அதே நேரம், இப்படிக் கேட்பவர்களில் பலர் குழந்தை பிறந்த நட்சத்திரத்தைத் தெரிவித்து, அதற்குரிய எழுத்தில் தொடங்கும் பெயராகக் கேட்பதையும் பார்க்கிறோம். அஃதாவது இந்தியச் சோதிட முறையில் குறிப்பிடப்படும் 27 உடுக்களில் (நட்சத்திரங்களில்) ஒவ்வோர் உடுவுக்கும் உரியவையாகச் சில எழுத்துகள் குறிப்பிடப்படுகின்றன; அந்த எழுத்துகளில் தொடங்குமாறு பெயர் வைப்பது சிறப்பானது என நம்பும்…