உழவும் கலப்பையும் காரும் கயிறும் குண்டையும் நுகமும் சாலும் வயலும் வாய்க்காலும் ஏரியும் மடுவும் ஏற்றமும் பிறவும், பயிரும் களையும் நட்டலும் கட்டலும் முதலாய ஏரெழுபதும் தமிழ் மொழிகளால் இயன்றனவே.   தமிழர்கள் வசித்துவரும் வீடுகளின் கூறுகளாகிய தலைக்கடையும் புழைக்கடையும் கூரையும் வாரையும் கூடமும் மாடமும் தூக்கும் தூணும் கல்லும் கதவும் திண்ணையும் குறமும் தரையும் சுவரும் மண்ணும் மரனும் மற்றவும் தமிழே.   தலையும் காலும் கண்ணும் காதும் மூக்கும் மூஞ்சியும் வயிறும் மார்பும் நகமும் சதையும் நாவும் வாயும் பல்லும்…