பாலை நிலத்தார் உணவு – மா.இராசமாணிக்கம்
பாலை நிலத்தார் உணவு ஓய்மானாட்டுப் பாலைநில மக்களான வேட்டுவர், இனிய புளிங்கறி எனப்பட்ட சோற்றையும் ஆமாவின் சூட்டிறைச்சியையும் உண்டனர். (சி.ஆ.படை அடி:175-177). தொண்டைநாட்டுப் பாலைநில மக்கள் புல்லரிசியைச் சேர்த்து நில உரலில் குற்றிச் சமைத்த உணவை உப்புக் கண்டத்துடன் சேர்த்து உண்டார்கள். விருந்தினர்க்கு தேக்கு இலையில் உணவு படைத்தார்கள். (பெ.ஆ.படை அடி:95-100). மேட்டு நிலத்தில் விளைந்த ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசிச் சோற்றையும் உடும்பின் பொரியலையும் உண்டார்கள். (பெ.ஆ.படை அடி:130-133). முனைவர் மா.இராசமாணிக்கனார் http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=525&Title=
நெய்தல் நிலத்தார் உணவு – மா.இராசமாணிக்கம்
நெய்தல் நிலத்தார் உணவு ஒய்மானாட்டு நெய்தல் நிலத்தார் நுளைச்சி அரித்த கள்ளையும் உலர்ந்த குழல் மீனின் சூட்டிறைச்சியையும் உட்கொண்டனர். (சி.ஆ.படை அடி:156-163). தொண்டை நாட்டுப் பட்டினத்தில் (இக்கால மாமல்லபுரத்தில்) நெல்லை இடித்த மாவாகிய உணவை ஆண் பன்றிக்கு இட்டுக் கொழுக்க வைத்தனர். அங்ஙனம் கொழுத்த ஆண் பன்றியைக் கொன்று அதன் இறைச்சியைச் சமைத்து உண்டனர். களிப்பு மிகுந்த கள்ளைப் பருகினர். (பெ.ஆ.படை அடி:339-345). காவிரிப்பூம்பட்டினத்து மீனவர் கடல் இறா, வயல் ஆமை ஆகிய இரண்டையும் பக்குவம் செய்து உண்டனர். (ப.பாலை அடி:63-64). பனங்கள்ளை உட்கொண்டனர்….
மருத நிலத்தார் உணவு – மா.இராசமாணிக்கம்
மருத நிலத்தார் உணவு சோழ நாடு சோற்றுவளம் மிகுந்தது. நல்ல காய்கறிகள் மிக்கது. ஆதலின், சோணாட்டார் நல்ல அரிசிச் சோற்றையும் காய்கறிகளையும் நிரம்ப உண்டிருத்தல் வேண்டும். ஆயினும், சிலவே இந்நூலுள் குறிக்கப்பட்டுள்ளன. மருத நில மக்கள் கரும்பும் அவலும் குறிஞ்சி நிலத்தார்க்குக் கொடுத்து மான் தசையையும் கள்ளையும் பெற்றுக் கொண்டனர் என்பது பொருநராற்றுப்படையில் கூறப்பட்டுள்ளது. அடி:216-217. ஓய்மானாட்டு மருத நிலத்தார் வெண்சோற்றையும் நண்டும் பீர்க்கங்காயும் கலந்த கலவையை(கூட்டை)யும் உண்டனர். (சி.ஆ.படை அடி:193-195). தொண்டை நாட்டு மருத நிலத்துச் சிறுபிள்ளைகள் (காலையில்?) பழைய சோற்றை உண்டனர்;…
முல்லை நிலத்தார் உணவு – மா.இராசமாணிக்கம்
முல்லை நிலத்தார் உணவு தொண்டைநாட்டு முல்லை நிலத்தார் பாலையும் திணையரிசிச் சோற்றையும் உண்டனர். (பெ.ஆ.படை அடி:167-168). முல்லை நிலத்துச் சிற்றூர்களில் இருந்தவர் வரகரிசிச் சோறும் அவரைப்பருப்பும் கலந்து செய்த “கும்மாயம்” எனப்பெயர் பெற்ற உணவை உண்டனர். (பெ.ஆ.படை அடி:192-195). நன்னனது மலைநாட்டு முல்லை நிலத்தார் சிவந்த அவரை விதைகளையும் மூங்கிலரிசியையும் மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லின் அரிசியையும் புளி கரைக்கப்பட்ட உலையிற்பெய்து குழைந்த புளியங்கோலாக்கி உட்கொண்டனர். அடி:434-436. பொன்னை நறுக்கினாற்போன்ற நுண்ணிய ஒரே அளவுடைய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய சோற்றையும்…
குறிஞ்சி நிலத்தவர் உணவு – மா.இராசமாணிக்கம்
குறிஞ்சி நிலத்தவர் உணவு சோழநாட்டுக் குறிஞ்சி நிலமக்கள் தேனையும் கிழங்கையும் உண்டார்கள். பிற நிலத்தார்க்கும் விற்று மீன், நெய்யையும் நறவையும்(தேன்) வாங்கிச் சென்றார்கள் (பொ.ஆ.படை அடி:214-15). சிறப்பு நாள்களில் நெய் மிக்க உணவு உட்கொள்ளப்பட்டது. (குறிஞ்சிப்பாட்டு அடி: 304). நன்னனுக்குரிய சவ்வாது மலையில் அடிவாரத்தில் இருந்த சிற்றூர்களில் வாழ்ந்த மக்கள் திணைச்சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டார்கள். (மலைபடுகடாம் அடி:168-169). நன்னனுடைய மலைகளைச் சேர்ந்த குறிஞ்சி நிலத்தார் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சியையும் கடமான் இறைச்சியையும் பன்றி இறைச்சியையும் உண்டனர். நெல்லால் சமைத்த…
கோவை மக்கள் நல்லுறவு நலச்சங்கத்தின் இயற்கைவழிக் கண்காட்சி
தை 16 & தை 17 – சனவரி 30 & சனவரி 31, 2016 கோவை மக்கள் நல்லுறவு அன்புடன் அழைக்கிறது
சப்பான் தமிழ்ச்சங்கத்தின் கோடைவிழா
சப்பான் தமிழ்ச்சங்கத்தின் கோடைவிழா அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! சப்பான் தமிழ்ச்சங்கத்தின் கலை – பண்பாட்டுத் துறையின் சார்பாக இந்த ஆண்டு கொண்டாட விழைந்திருக்கும் கோடைவிழா வரும் புரட்டாசி 16 / அக்டோபர் மாதம் 3ஆம் நாள் “வணக்கம் தமிழகம்” என்ற பெயரில் நடைபெறவிருக்கின்றது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோக்கியோ மாநகரில் கொண்டாடப்படவுள்ள இவ்விழாவில் ஆடவர், பெண்டிர், குழந்தைகளுக்கான நமது பரம்பரை விளையாட்டுகள், கலைநிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன. உடல்நலம் காக்கும் நம் தமிழர்களின் விளையாட்டுகளையும் ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற நம் பரம்பரை உணவு…
கலைச்சொல் தெளிவோம் 42 : வகுத்தூண்-diet
42 : வகுத்தூண்-diet உணவு-meal (ஆட்.,கால்.), food (வேளா.,சூழ.,), diet (பயி.,மீனி.) என வெவ்வேறு வகையாகக் குறிப்பிடுகின்றனர். (இ)டயட்(டு)-diet என்பதைத் திட்ட உணவு (ஆட்.,வேளா.,மனை.), சீர் உணவு(ஆட்.), சரியுணவு, அளவு உணவு என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். இவை யாவும் இயல்பான நிலையில் உள்ள சரியளவு உணவைக் குறிப்பதாகவே கருதப்படுகின்றன. பத்தியம் என்றும் சிலர் சொல்கின்றனர். இது சரியான சொல் என்றாலும் நோய்நிலையுடன் தொடர்புபடுத்தியே கருதிப் பார்ப்பதால் இதுவும் இயல்பான நிலையில் ஏற்கத்தக்கதாகக் கருதப்படவில்லை. உணவுக் கட்டுப்பாட்டையே வழக்கத்தில் இச்சொல்லின் பொருளாகக் கருதுகிறோம். நாம் கொள்ளத்…
கலைச்சொல் தெளிவோம்! 3.] உணவும் சாப்பாடும் – இலக்குவனார் திருவள்ளுவன்
உணவு- meal(ஆட்.,கால்.), food(வேளா.,சூழ.,), diet(பயி.,மீனி.) என வெவ்வேறு வகையாகக் குறிப்பிடுகின்றனர். (இ)டயட்(டு) – diet என்பதைத் திட்ட உணவு(ஆட்.,வேளா.,மனை.), சீர் உணவு(ஆட்.), சரியுணவு, அளவு உணவு என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். இவை யாவும் இயல்பான நிலையில் உள்ள சரியளவு உணவைக் குறிப்பதாகவே கருதப்படுகின்றன. பத்தியம் என்றும் சிலர் சொல்கின்றனர். இது சரியான சொல் என்றாலும் நோய்நிலையுடன் தொடர்புபடுத்தியே கருதிப் பார்ப்பதால் இதுவும் இயல்பான நிலையில் ஏற்கத்தக்கதாகக் கருதப்படவில்லை. உணவுக் கட்டுப்பாட்டையே வழக்கத்தில் இச்சொல்லின் பொருளாகக் கருதுகிறோம். நாம் கொள்ளத் தக்கனவும் தள்ளத்தக்கனவும்…