meals01 diet01

 kalaicho,_thelivoam0142 : வகுத்தூண்-diet

 

 உணவு-meal (ஆட்.,கால்.), food (வேளா.,சூழ.,), diet (பயி.,மீனி.) என வெவ்வேறு வகையாகக் குறிப்பிடுகின்றனர்.

 (இ)டயட்(டு)-diet என்பதைத் திட்ட உணவு (ஆட்.,வேளா.,மனை.), சீர் உணவு(ஆட்.), சரியுணவு, அளவு உணவு என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். இவை யாவும் இயல்பான நிலையில் உள்ள சரியளவு உணவைக் குறிப்பதாகவே கருதப்படுகின்றன. பத்தியம் என்றும் சிலர் சொல்கின்றனர். இது சரியான சொல் என்றாலும் நோய்நிலையுடன் தொடர்புபடுத்தியே கருதிப் பார்ப்பதால் இதுவும் இயல்பான நிலையில் ஏற்கத்தக்கதாகக் கருதப்படவில்லை. உணவுக் கட்டுப்பாட்டையே வழக்கத்தில் இச்சொல்லின் பொருளாகக் கருதுகிறோம். நாம் கொள்ளத் தக்கனவும் தள்ளத்தக்கனவும் யாவை என அறிந்து அல்லது உணர்ந்து வகுத்து அமைத்துக் கொள்ளும் உணவு முறையே இது. உணவைப் பகுத்து உண்பதால் பகுத்தூண் என்று கருதிப்பார்க்கப்பட்டது. பகுத்தூண் என்பது பிறருக்குப் பகுத்து உண்ணும் பண்பு நிலை வெளிப்பாடே. தெய்வப்புலவர் திருவள்ளுவரும் ‘பாத்தூண் மரீஇயவனை’ (குறள் 227) என்றும் ‘தம்மில் இருந்து தமது பாத்துஉண்டற்றால்’ (குறள் 1107) என்றும் குறிப்பிடுகிறார். உணவு என்பதே பகுத்து உண்ணுவதாக அமைய வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்த பாத்து என்னும் உணவின் பெயரே வடக்கே பாத்(து) என்றாகி, நம்மால் தக்காளிப் பாத்(து), என்பது போன்று சொல்லப்படுகின்றது. எனவே, பகுத்தூண் என்னும் சொல் பொதுவில் அமைவதால், இதனடிப்படையில் உடல் நலத்திற்கேற்றவாறு வகுத்து (4) அமைக்கும் உணவு முறையை வகுத்தூண் என்று சொல்வது பொருத்தமாக அமையும்.

உணவு-food

சாப்பாடு-meal

வகுத்தூண்-diet