உத்தமம், கட்டுரை நாள் நீட்டிப்பு

வணக்கம்.உத்தமம் இணைய மாநாடு 2021 இற்கான கட்டுரைச் சுருக்கம் அளிக்க புரட்டாசி 24, 2052 / 10 அட்டோபர் 2021 வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழ்க் கணிணி ஆய்வாளர்கள் கட்டுரை வழங்க அன்புடன் வேண்டுகிறோம்.நன்றி. மா. கணேசன்தலைவர், உத்தமம்  

உத்தமத்தின் 20ஆவது இணைய மாநாடு

20 ஆவது தமிழ் இணைய மெய்நிகர் மாநாடு உத்தமம்(INFITT) கார்த்திகை 17+19 / 3-5.12.2021 படைப்புகள் வந்து சேருவதற்கான இறுதி நாள் 30.09.2021 அனுப்ப வேண்டிய மின்வரி cpc2021@infitt.org   முழுத் தகவல்களுக்கு www.tamilinternetconference.org  

17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு: செய்முறைப் பயிற்சிகள்

17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு: செய்முறைப் பயிற்சிகள் உத்தமம் என்ற அமைப்பு நடத்தும் 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு சூ லை 6,7,8, 2018 நாள்களில் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், தமிழ்க்கணிமை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கின்றனர், மேலும், மக்கள் அரங்கம் என்ற வகையில் செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. (கட்டணம் உண்டு. 600 உரூ அரைநாள் பயிற்சி, 900 உரூ முழு நாள் பயிற்சி)  இதனுடன் ஒரு நிரலாக்கத் திருவிழாவும் உள்ளது….

வணிக நோக்கிலான கருத்தரங்கங்களும் மோசடிப்பேர்வழிகளும் – இலக்குவனார் திருவள்ளுவன்

வணிக நோக்கிலான கருத்தரங்கங்களும் மோசடிப்பேர்வழிகளும்   கருத்தரங்கங்கள் கருத்துப் பரவலுக்கும் புத்தறிவிற்கும் மனமகிழ்ச்சிக்கும் படைப்புப் பெருக்கத்திற்கும் வழி வகுப்பன. ஆனால், இப்பொழுதெல்லாம் கருத்தரங்கம் என்றாலே அச்சம்தான் வருகின்றது.   சிலர் தங்களுக்கு வேண்டிய பேச்சாளர்களை முடிவெடுத்துக் கொண்டு கருத்தரங்கம் என அறிவிப்பார்கள். அக்கூட்டத்தில் யாரும் கேள்வியும் கேட்கக்கூடாது என்பார்கள். சொற்பொழிவாக இருந்தாலும்  1 மணி நேரம்  பேசினால் 10 மணிக்கூறாவது கலந்துரையாடல் இடம் பெற வேண்டும் என்பார் நாவரசர் அறிஞர் ஒளவை நடராசன். ஆனால், இவர்கள் தாங்கள் மட்டும் பேசிக்கொண்டு கருத்தரங்கம் என்பர்.  குறிப்பிட்ட…

தகடூர் கோபி நினைவேந்தல், சென்னை

தை 21, 2049 – சனிக்கிழமை – 03-02-2018 மாலை 3.30 முதல் 6 மணி வரை  ’தமிழ் இணையச் சிற்பி’ தகடூர் கோபி நினைவேந்தல் கூட்டம்  இடம் : கவிக்கோ மன்றம், மைலாப்பூர், சென்னை 600 004 https://goo.gl/maps/DWeWZoFDFCk நிகழ்வில் சகாயம், இ.ஆ.ப., தமிழார்வலர்கள், பதிப்பாளர்கள், நண்பர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். தொடர்புக்கு : சீனிவாசு பார்த்தசாரதி @98843 99992  செல்வமுரளி @99430 94945  இரசினி இராம்கி @98414 89907  மாயவரத்தான் கி.இரமேசுகுமார் @88388 21638  அன்புடன் கணிணித்தமிழ் சங்கம் 9884399992 /…

இரண்டாம் உத்தமத்தில் என்ன நடக்கிறது? நேர்மையாளர்களே விடையிறுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இரண்டாம் உத்தமத்தில் என்ன நடக்கிறது? நேர்மையாளர்களே விடையிறுங்கள்!    உத்தமம்  (உலகத்தமிழ்த்தகவல் தொழில் நுட்ப மன்றம் –  International Forum for Information Technology in Tamil – INFITT) என்னும் அமைப்பு தகவல்தொழில்நுட்பம் மூலமாகத் தமிழை வளர்ப்பதற்காகத் தோன்றிய அமைப்பு. 1997இல்  முதல் தமிழ் இணைய மாநாட்டை நடத்தியிருந்தாலும் 2000இல்தான் முறையாக  இவ்வமைப்பு வடிவம் பெற்றது. இதுவரை 16  தமிழ் இணைய மாநாடுகளை 5 நாடுகளில் நடத்தி 800க்கு மேற்பட்ட கட்டுரைகள் அரங்கேற்றியுள்ளது. எனினும் இவ்வமைப்பில் கணிநுட்பர்களுக்கு முதன்மை அளித்துத் தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும்…

உத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும், கனடா

அன்புடையீர்,   உத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும் கனடாவில் புகழ்மணக்கும் தொராண்டோ பெருநகரில் ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய நாள்களில் நடக்கவிருக்கின்றது.  உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர்கள் சிறப்பு ஆய்வுரை நிகழ்த்தவிருக்கின்றார்கள்.   தமிழ்க்கணிமை சார்ந்த எல்லாத் தலைலப்புகளிலும்  ஆய்வுக்  கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.   கருத்தரங்க முழக்கங்கள்: ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும்  (Deep Learning) தமிழில் தரவு அறிவியல் (Data Science)     நினைவில் கொள்க: 2 பக்க ஆய்வுச்சுருக்கம் அனுப்ப இறுதி  நாள்: சித்திரை…

15 ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு

15 ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு    “உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்” – “உத்தமம்” எனும் பெயரில் இயங்கி வருகிறது. 1997 ஆமாவது ஆண்டில் திரு. கோவிந்தசாமி அவர்களின் முழு முயற்சியில் வித்திடப்பட்டு 2000 ஆமாவது ஆண்டில் திரு. சுசாதா, திரு. தமிழ்க்குடிமகன், பேராசிரியர் அனந்தகிருட்டிணன் ஆகியோரின் அன்பு வழியில்இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பதிவு செய்யப்பட்டுத் தனது பயணத்தைத் தொடர்ந்தது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஐரோப்பா முதலான பல நாடுகளில் “உத்தமம்” அமைப்பின் உறுப்பினர்கள்…

15ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 – ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் காந்தி ஊரகப்பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 15ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 மாநாட்டில் பங்கு பெற  ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) (15ஆவது) உலகத் தமிழ் இணைய மாநாடு ஆவணி 24,25&26, 2047 / 2016 செப். 9,10,11 ஆகிய நாள்களில் திண்டுக்கல் காந்தியூர் ஊரக (கிராமிய)ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள து  . 2016 மாநாட்டின் முதன்மைத் தலைப்பாகக்  “கணிணியெங்கும் தமிழ்! கணிணியெதிலும் தமிழ்!” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்குறிப்பிடும் தலைப்புகளில்…

அலைபேசிக்கணிமை 2016 – தமிழ்க்குறுஞ்செயலிகள் உருவாக்க மாநாடு

அன்புள்ள உத்தமம் உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.  தை 22 & 23, 2047 / பிப் 5 & 6, 2016  ஆகிய  இருநாளும் உத்தமம் இந்தியக்கிளையின் சார்பாக செல்பேசிக் கணிமை 2016. – தமிழ்க்குறுஞ்செயலிகள் உருவாக்க மாநாடு – கருத்துரை வழங்கும் நிகழ்வு தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நடைபெற உள்ளதால் அனைத்து உத்தமம் உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.   செல்பேசிக் கணிமை 2016 குறுஞ்செயலி மாநாடு நிச்சயமாக அனைத்துப் பேராசிரியர்கள் – தமிழ்க் கணியன்கள்(மென்பொருள்) உருவாக்குநர்களுக்குப் பேரளவில் உதவியாக இருக்கும்.  தமிழில் கணியன்கள்(மென்பொருள்கள்) உருவாக்கினால் நிதி…

இணைய மாநாடு :ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான கடைசி நாள் நீட்டிப்பு

 ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான  கடைசி நாள் நீட்டிப்பு உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூரில் மே 30, 31 & சூன்1 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது மாநாட்டில் பங்கு பெறுவதற்கான சுருக்கக் கட்டுரையை அனுப்பும் நாள் தை 1, 2046 /  15.01.2015 என நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கட்டுரையாளர்கள் தத்தம் கட்டுரையை அனுப்பி வைக்க வேண்டப்படுகின்றனர்.