வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 33(2.03) – உயிர்த்துணை கொள்ளல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 32 (2.02) – தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 33.உயிர்த்துணை கொள்ளல் உயிர்த்துணை தன்னுயிர்க் குதவெதிர் பாற்றுணை. உயிர்த்துணை என்பவர் நம் வாழ்க்கைக்கு ஆதரவான எதிபாலைச் சார்ந்த துணை ஆகும். அத்துணைக் கெங்கனு மொத்ததொன் றிலதே. வாழ்க்கைத் துணைக்கு ஈடு, இணை யாரும் இல்லை. ஆக்கமுங் கேடு மத்துணை யாலாம். ஒருவருடைய செல்வமும் அழிவும் அவருடைய உயிர்த் துணையால் அவருக்கு அமைகிறது. கொள்ளு மறிவெலாங் கொண்டுபின் றுணைகொளல். ஒருவன் தன் அறிவைக் கொண்டு நன்கு ஆராய்ந்து பின்னர் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தல்…