(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 33 (2.03) – தொடர்ச்சி)   மெய்யறம் இல்வாழ்வியல் 34.உயிர்த்துணை யாளுதல் 331. இருவரு ளறிவிற் பெரியவ ராள்க. கணவன், மனைவி இவர்களில் அறிவில் சிறந்தவர் குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தல் வேண்டும். ஆண்பா லுயர்வெனல் வீண்பேச் சென்க. ஆண்கள்தான் சிறந்தவர் என்று கூறுவது பயனற்ற பேச்சு ஆகும். துணைநன் காள்பவர் தொல்லுல காள்வர். வாழ்க்கைத்துணையுடன் ஒற்றுமையாக வாழ்பவர் உலகம் முழுவதும் வெற்றி கொள்வர்.(எல்லா இன்பங்களும் அடைந்து வாழ்வர்.) தன்னுயி ருடல்பொரு டன்றுணைக் குரியன. ஒருவருடைய உயிர், உடல், பொருள் எல்லாம்…