உயிர்மி-cell நம் உடலில் கோடிக்கணக்கான நுண்ணறைகள் அமைந்துள்ளன. சிறு அறை என்னும்பொருளில்  இலத்தீனி்ல் செல்லுலர் என்று அழைத்தனர். இதை இராபர்ட்டு ஊக்கி என்னும் அறிஞர்(1560) சுருக்கிச் செல் என்று குறிப்பிட்டார். அதனை நாம் தமிழில் பெரும்பாலும் செல் என்றே குறிப்பிடுகிறோம். நுண்ணறை என்றும் உயிரணு என்றும் ஒரு சாரார் அழைத்து வருகின்றனர். செந்து என்றும் முன்பு உயிரணுவை அழைத்துள்ளனர்(பிங்கல நிகண்டு பா.3561). செங்கற்களை அடிப்படையாகக் கொண்டு கட்டடம் எழுப்பப்டுகின்றது. அது போல் உயிர்(209) உறையும் உடல் கட்டுமானத்திற்கு அடிப்படையான இதனை உயிர்மி என்று சொல்லலாம்….