ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (17) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (16) தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (17) 4. உலகம் தழுவும் நோக்கு விசாலப் பார்வையால் உலகத்தை நோக்கி ச் சிந்தனைகள் வளர்க்கும் கவிஞர், தென் வியத்துனாம் விடுதலைப்படையின் வெற்றி குறித்து உவகைப் பெருக்கோடு பாடியிருக்கிறார். பாகித்தான் பாதகத்தை எதிர்த்து வீரமுழக்கம் செய்கிறார். எகிப்து இசுரேல் போர் பற்றி உணர்ச்சியோடு கவிதை இயற்றியுள்ளார். இக்கவிதைகளில் அவருடைய நேர்மை உள்ளமும் நியாய உணர்வும் ஒலிசெய்கின்றன. பெருநாடு சிறு நாட்டைப் பிய்த்து வீழ்த்தல் பிழையென்றால் அப்பிழையைச் சிறுநாடும் செய்யாமல்…