காப்பியாற்றுப்படை – (உ)ருத்திரா
காப்பியாற்றுப்படை நெடுங்காந்தள் மூசிய அடைகரை அன்னவால் இயற்றிய வளைஇளம் நெற்றிகண்விழித்தாங்கு மொழி படாத்து மடமைகாப்பியாறு இமிழ்தரு இன்னொலியின்கதுப்பு சிவந்தவள் மணிகிளர் காட்சி.கழைபடுத்த பாம்பின் நுண்ணுரி சுற்றஇலஞ்சி நீழல் குவி இணர் கவிக்கஎழிலுண் மைக்கடல் எறிதிரை ஏய்ப்பகுணில் பாய் முரசம் உள்ளொலி எதிரமழைக்கண் கொண்டு பேய்வெள்ளருவிமலர் பொருது மற்று மண் பொருது இறங்கிபொறிப்பரல் முரல நீர்வழி போன்ம்நீடிய நெஞ்சின் அளியவள் காட்சி.முதிர்கான் போழ்ந்த வெண்ணிய காலைமுழைகள் ஒளியும் அதிர்செவி முயலாய்காட்டி காட்டி மறைக்கும் மன்றிடைகள்ளநகையாள் அவிழ்தரும் நகையுடன்சிந்திய சொல்லில் வித்திய முதிர்நெல்விளைதரும் என்று பலவு வீழ்த்தபடப்பை…
வான் புகழ் தமிழ் நாட்டின் புத்தாண்டு வாழ்த்துகள்! – உருத்திரா
உழவன் என்றொரு உயர்ந்ததோர் தமிழன் கிழக்கில் உதித்த கதிரையும் ஒளி பாய்ச்சி நாற்று நட்டு வழி காட்டி நன்று வைத்தான். விசும்பின் துளி கண்டு பசும்பயிர் வளங்கள் கண்டான். இஞ்சியும் மஞ்சளும் கரும்பும் சங்கத்தமிழ்ச் சுவைகள் ஆகி தமிழ்ப் புத்தாண்டு மலரும் இன்று. பொங்கல் பொலிக! பொங்கலோ பொங்கல்! வள்ளுவனை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாட்டின் இனிய தமிழ் புத்தாண்டு இன்று. எல்லோருக்கும் என் இதயம் கனிந்த இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்! உருத்திரா
கலித்தொகை போன்ற ‘களித்தொகை’ – உருத்திரா
வேம்பு நனை ஈர்ங்கண் வேம்பு நனை ஈர்ங்கண் அலவன் ஆர்ப்ப தூம்பு கொள் நறவின் மணிச்சிறைத் தும்பி அயல் சினை சேக்கும் அரிமணற் சேர்ப்ப! ஓங்கு பூ வேழத்து உளை அலரி செறித்த விரி இமைப் பூமயிர் அவள் உண்கண் வீழ்ந்து மல்லல் களிற்று மருப்பு மாய்ந்தன்ன புண்பட்டனை என்னை.அறிகுவை இஃது அவள் பால் பட்ட காதல் மாத்திறம் . அறிகுவை!அறிகுவை! மற்று எற்றுக்கு நின் வெண்முத்துக்குடையும் ஆனை நிரையும்? அவள் விழிநாடு வெல்லுதல் இயலுமோ வளை நரல் பௌவம் கலன்…