ஒரு சவ்வூடு பரவல் – உருத்ரா இ பரமசிவன்

ஒரு சவ்வூடு பரவல் உன் இதயம் இங்கே வந்து விட்டது. உன் சிரிப்புக்கொத்தைக்கூட‌ உருவிக் கோர்த்து கழுத்தில் மாட்டியிருக்கிறேன். சுண்டியிழுக்கும் உன் கண் தூண்டில்கள் கூட‌ என் உள்ளங்கைக்கடலில் என் கண்ணாடி மீன்களைத்தான் சுழற்றிக்கொண்டிருக்கின்றன. உன் இனிய சொற்கூட்டம் எல்லாம் என்னை மொய்த்த‌ தேன்சிட்டுகளின் ஒலிப்புகளாய் என் கண் மூக்கு காது வாய் தொண்டை என்று இன்பக் க‌மறல்களில் என்னை திணறடித்துக்கொண்டிருக்கிறது. எந்தக் கணவாய் வழியாய் இங்கே ஆக்கிரமிப்பு செய்தாய்? தெரியவில்லை. அங்கே இருந்து இங்கே ஊடுருவி வர‌ என்ன “சவ்வூடு பரவல் முறையை”…

பெண்ணை மடல் மா – உருத்ரா இ.பரமசிவன்

பெண்ணை மடல் மா பெண்ணை மடல்மா கலித்தல் அன்ன‌ எருக்கம் சூடி உருக்கம் பயின்று ஆயிழைப் பொலங்கிளர் வாணுதல் எய்ய‌ இல் இல் அடுத்து ஊர்ந்தனை மன்னே! தகரக்கூந்தல் கனலன் குரலென‌ கூரிய வீசும் அவள் நிலை அறியா புல்லியக்கல்லா நெடுமகன் போல மடலேறு ஆண்தகை மடம் கொண்டன்ன‌ அவள் பயிர் மடமே உணரா நின்று உகுத்தனை என்னே விரிஉளை அலரி. தூற்றல் கொடுநோய் அவள் உற்றது அறிதி. குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர்முள் செத்தென போர்த்த நீள்வரிப்பெண்ணை நெடுமா தொலைச்சிய‌ செல்தி!…

பல்வரி நறைக்காய் – உருத்ரா இ.பரமசிவன்

பிணி நீக்க ஈண்டு வருதி மன்னே!   பல்வரி நறைக்காய் தின்றனை போன்ம் மிடற்றிய தீஞ்சொல் மூசும் பாயல் களித்து ஆர்த்த கழிநெடு கங்குல் மறந்தனை விடுத்தனை மாறு மாறு வருகை. என்னென் கழறும் என்னறியும் தடம் கொல். இடம் வீழ்ந்த நெடுமா மறுக்கும் வெம்புலியன்ன ஊண் மறுக்கும் கால்கொள் வாழ்வும் மறுத்துச்சாயும் எனவாங்கு தூம்புடை வல்லெயிற்று அரவு தீண்டிய‌ நோவு மிக்குற்று நோன்றனள் மாதோ. நன்மா தொன்மா நனிமா இலங்கை நல்லியக்கோடன் யாழிய இசையின் நலம் கெட செய்தனை எற்று எற்று இவள்…

ஆதலினால் காதல் செய்வீர் – (உ)ருத்ரா

  புலிநகக்கொன்றை கரையெல்லாம்பூத்திருக்க‌ உறுமல் ஒன்று கேட்குதையா! உள்ளெல்லாம் கிடு கிடுக்க. எக்கர் ஞாழல் அடர்ந்த சோலை அலையொடு சேர்ந்து அழுதே அரற்ற‌ நாணல் கீற்றும் பச்சைத்தீயாய் நாடியெல்லாம் பற்றி எரிக்குதே. பொருள் வயின் செல்கிறேன் என‌ கடுஞ்சுரம் ஏகிவிட்டாய்..இங்கு குருகு கூட பறைச்சிறகை படபடத்து துடி துடித்துக்காட்டுதையா. உள்ளே நில நடுக்கம் தவிடு பொடி ஆக்கியதில் நான் எங்கே? என் உடல் எங்கே? என் உறுப்புகளும் கழன்றனவே! இதழ் குவிக்கும் ஒரு பக்கம் சொல் அங்கே இறந்துவிழ. சிறுபயல் பிய்த்திட்ட‌ பாவை நான்…

கல்பெயர்த்து இழிதரும் – (உ)ருத்ரா பரமசிவன்

    கல் பெயர்த்து இழிதரும் இமிழ் இசை அருவி புல்லோடு ஆங்கு பழனம் தழீஇ பச்சை படர்த்தி பகலவன் தீவிழி அவிப்பக் குளிரும் நீர் விரி பரவை நெடுநல் நாட!அஃது மன் அன்று உள் ஊறு தண்புயல் கண்புயல் படர‌ அடுதுயர் தந்தனை வெஞ்சுரம் ஏகி. நீர்ச்சுனை தீச்சுனை போலும் நிழலும் வேகும் அழல்நுரை அள்ளி அன்னமும் கலங்கும். ஐய நின் துழந்த பிரிவின் கொல் துயர் பொய்த்தீ பற்றி பொல்லாங்கு செய்யும். மைபொதி வானும் புள்நிரல் பொலிவும் இடி உமிழ்பு கண்டு…

திகட்டாத் தமிழிதழ் – (உ)ருத்ரா இ.பரமசிவன்

அகர முதல வெறும் அகட விகடம் அல்ல. அகலத் தமிழின் அகழ்வாராய்ச்சித் திகழ் ஒளி வீசும் திகட்டாத் தமிழிதழ். பனை ஏடுகளின் மன ஏடுகள் மடல் அவிழ்க்கும் மங்கா விளக்கின் மாணிக்கச்செவ்விதழ். வாழ்த்துக்களும் பாராட்டுகளும் அன்புடன் (உ)ருத்ரா இ.பரமசிவன்

வாழி வாழி நீவிர் – (உ)ருத்ரா இ.பரமசிவன்

அன்புள்ள திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களே! துரும்பு அசையும் தூசு அசையும் அதையும் விட‌ துல்லியமாய் அசையும் தமிழின் எழுத்தும் சொல்லும் உங்கள் இதயத்தில் தான் முதலில் அசைகிறது. உங்கள் அருந்தமிழ்ப்பணி தொடர‌ வாழி வாழி நீவிர் நீடுழி நீடூழி வாழ்வீர். அன்புடன் (உ)ருத்ரா இ.பரமசிவன்

“அகர முதல” கண்டு மலைத்தேன்.

“அகர முதல” விரித்த அருந்தமிழ் கண்டு மலைத்தேன். நூல் விரித்தன்ன‌ மணிநீர் அருவி நுழை படுத்தாங்கு மெல்லிமிழ் தும்பி புன்கால் குடைதர‌ நுண்புலம் அதிர்ந்து விண் விதிர்த்தாங்கு பொதிகை அடுக்கம் பரல் நரல் தமிழின் பொறி கிளர்ந்தன்ன‌ பொற்றமிழ் கண்டு களி மிகுதலுற்றேன். புல்லுள் கல்லுள் புள்ளுள் குன்றுள் அமிழ்தமிழ் ஈண்டு அகவுதல் கேட்டு அக மகிழ்வுற்றேன். வாழ்த்துக்களுடன் (உ)ருத்ரா இ.பரமசிவன்