அருளாழி நயந்தோய் நீஇ !
அருளாழி நயந்தோய் நீஇ ! அறவாழி பயந்தோய் நீஇ ! மருளாழி துறந்தோய் நீஇ ! மறையாழி புரந்தோய் நீஇ ! மாதவரில் மாதவன் நீஇ ! வானவருள் வானவன் நீஇ ! போதனரிற் போதனன் நீஇ ! புண்ணியருட் புண்ணியன் நீஇ ! வீரசோழியம், யாப்பருங்கலம் 11 உரை பெருந்தொகை தொகுப்பு: மு.இராகவையங்கார்: 188
ஆதி நீஇ ! அமலன் நீஇ !
ஆதி நீஇ ! அமலன் நீஇ ! ஆதி நீஇ ! அமலன் நீஇ ! அயனும் நீஇ ! அரியும் நீஇ ! சோதி நீஇ ! நாதன் நீஇ ! துறைவன் நீஇ ! இறைவன் நீஇ ! அருளும் நீஇ ! பொருளும் நீஇ ! அறிவன் நீஇ ! அநகன் நீஇ ! தெருளும் நீஇ ! திருவும் நீஇ ! செறிவும் நீஇ ! செம்மல் நீஇ ! வீரசோழியம்…
எண்ணிறந்த குணத்தோய் நீ!
எண்ணிறந்த குணத்தோய் நீ! எண்ணிறந்த குணத்தோய் நீ; யாவர்க்கு மரியோய் நீ; உண்ணிறைந்த வருளோய் நீ; உயர்பார நிறைத்தோய் நீ; மெய்ப்பொருளை யறிந்தோய் நீ; மெய்யறமிங் களித்தோய் நீ; செப்பரிய தவத்தோய் நீ; சேர்வார்க்குச் சார்வு நீ; வீரசோழியம், யாப்பருங்கலம் 11, உரை
எம்.பி.நிர்மலுடன் பல்வழி அழைப்பில் உரையாடல்
தமிழ், தமிழென்று பேசுவோர்க்கும், தமிழகத்திற்கு நமது பங்களிப்பு என்னவென்று கேட்போருக்கும் அரிய மாலைப் பொழுது ! சிந்தனைச் செம்மல், செயல் வீரர் நிருமல் அவர்களுடன் கலந்துரையாடல் . [https://youtu.be/pg2ANFKl1Cs Periyar International USA] சமூகவியல் சொற்பொழிவு தமிழகம்: சமூகநல களப்பணிகள். திரு. எம்.பி. நிருமல் உலகத்தின் மாசுவான சுற்றுச்சூழல் சீர்கேடுகளைச் சரி செய்ய எக்சுநோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய எம்.பி. நிருமல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க ‘மொழி மொழி’ என்ற அமைப்பையும் உருவாக்கி…
புதுச்சேரி ஆளுநர் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை மதிக்க வேண்டும் – தனித்தமிழ் இயக்கம்
புதுச்சேரி ஆளுநர் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை மதிக்க வேண்டும் – தனித்தமிழ் இயக்கம் ஆண்டுதோறும் சிலப்பதிகாரவிழாவைப் புதுச்சேரியில் தனித்தமிழ் இயக்கம் நடத்திவருகிறது. இவ்வாண்டு ஆனி 16, 2047 / சூன் 30, 2016 இல் புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் சிலப்பதிகார விழா நடைபெற்றது. தனித்தமிழ்இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில் முனைவர் கனகராசு வரவேற்புரை நிகழ்த்தினார். சிலப்பதிகாரம் பற்றிய பா வரங்கில் மு.பாலசுப்பிரமணியன், இரா.தேவதாசு, ஆறு.செல்வன், சண்முகசுந்தரம், இரா. இள முருகன், நட.இராமமூர்த்தி ஆகிய பாவலர்கள் கலந்து கொண்டனர். புரவலர் கி.கலியபெருமாள் செயல்அறிக்கை படித்தார்….
பரிமேலழகரின் சிறப்பான உரையும் நச்சுக்கலப்பும்! – ஞா.தேவநேயன்
பரிமேலழகரின் சிறப்பான உரையும் நச்சுக்கலப்பும் இதுபோது திருக்குறள் முப்பது மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. அவையுட்பட அந்நூலுரைகள் ஏறத்தாழ நூறுள்ளன. ஆயினும், இன்னும் பரிமேலழக ருரையே தலை சிறந்த தெனவும் எவ்வுரையாலும் வீழ்த்தப்படாததெனவும் பொதுவாகக் கருதப்பட்டு வருகின்றது. அது பெரும்பாலும் ஏனையுரைகளெல்லா வற்றினுஞ் சிறந்ததென்பதும், சில குறள்கட்கு ஏனையுரையாசிரியர் காணமுடியாத உண்மைப் பொருளைப் பரிமேலழகர் நுண்மையாக நோக்கிக் கண்டுள்ளார் என்பதும், உண்மையே. ஆயின், பெறுதற்கரிய அறுசுவையரசவுண்டியில் ஆங்காங்குக் கடுநஞ்சு கலந்து படைத்துள்ள தொப்ப, உண்மைக்கு மாறானதும் தமிழுக்குந் தமிழர்க்குங் கேடு பயப்பதுமான ஆரிய…
பரிமேலழகரின் உரைப்பாங்கு தனிச் சிறப்புடையது! – இரா.நெடுஞ்செழியன்
பரிமேலழகரின் உரைப்பாங்கு தனிச் சிறப்புடையது பரிமேலழகர் தமிழ்மொழியின் இலக்கிய இலக்கண நூல்களையும், வடமொழியின் இலக்கிய இலக்கண நூல்களையும் ஐயந்திரிபு அறமுற்றும் தெளிவுறக் கற்றறிந்தவர் என்பதை, அவரது உரையின் வளத்தால் நன்கு அறிந்து கொள்ளலாம். அவர், தமது உரையில் 230க்கும் மேற்பட்ட இலக்கிய இலக்கணச் செய்யுள்களை மேற்கோள்களாகக் காட்டுகிறார் என்றால், அவரது தமிழ் இலக்கிய இலக்கணப் புலமை, தெளிவாக உணரப்படும். ஒவ்வொரு குறளுரையிலும் அவர், இலக்கண அமைதியைச் செம்மையுக் கூறிச் செல்லும் பாங்கு தனிச் சிறப்புடையதாகும். – நாவலர் இரா.நெடுஞ்செழியன்: திருக்குறள் தெளிவுரை: முன்னுரை
உரைதொடர்ந்து பரவிய விதம்! – இறையனார்
உரைதொடர்ந்து பரவிய விதம் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் தம் மகனார் கீரங் கொற்றனார்க்கு உரைத்தார்; அவர் தேனூர் கிழார்க்கு உரைத்தார்; அவர் பாடியங் கொற்றனார்க்கு உரைத்தார்; அவர் மணலூர் ஆசிரியர் புளியங்காய்ப் பெருஞ்சேத்தனார்க்கு உரைத்தார்; அவர் செல்லூர் ஆசிரியர் ஆண்டைப் பெருங்குமாரனார்க்கு உரைத்தார்; அவர் திருக்குன்றத்து ஆசிரியர்க்கு உரைத்தார்; அவர் மாதவனார் இள நாகனார்க்கு உரைத்தார்; அவர் முசிறி ஆசிரியர் நீலகண்டனார்க்கு உரைத்தார். இறையனார் களவியல் உரை
திட்பமும் நுட்பமும் வாய்ந்த சேனாவரையர் உரை
திட்பமும் நுட்பமும் வாய்ந்த சேனாவரையர் உரை சேனாவரையர் உரை திட்பமும் நுட்பமும் வாய்ந்தது. சேனாவரையரின் புலமைப் பெருமிதமும் ஆராய்ச்சி வன்மையும் கருத்துத் தெளிவும் உரை முழுவதிலும் காணலாம். கற்கண்டை வாயிலிட்டு மெல்ல மெல்லச் சுவைத்து இன்புறுவதுபோல் இவர் உரையை நாள்தோறும் பயின்று மெல்ல மெல்ல உணர்ந்து மகிழவேண்டும். பலமுறை ஆழ்ந்து பயின்றாலும் இவ்வுரையை முற்றும் பயின்று விட்டோம் என்ற மனநிறைவு ஏற்படுவதில்லை. செங்குத்தான மலைமீது ஏற, கல்லும் முள்ளும் மேடும் பள்ளமும் நிறைந்த குறுகிய வழியில் வெயிலில் நடப்பது போன்ற உணர்ச்சியை, இவ்வுரையைக்…
தமிழ்ஒளி – 91 : பாடல் -கவிதை-உரை
புரட்டாசி 7, 2045 / 23.09.2014
மாவீரர்நாள் உரைமணிகள் சில! – 6
(முன்னிதழ்த் தொடர்ச்சி) . . .வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்கமுடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்கால நல்வாழ்வின்றிச் சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம். . . . -மாவீரர் நாள் உரை – 2004 நிலையற்ற வாழ்வையும்,உறுதியற்ற எதிர்காலத்தையும் இனியும் எமது…
மாவீரர்நாள் உரைமணிகள் சில! – 4
( 22.11.2044 / 08.12.13 இதழின் தொடர்ச்சி) எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழிழ மக்களே, இன்றைய நாள் எமது தேசத்து விடுதலை வீரர்களின் நினைவு நாள். தாயக விடுதலையை தமது உயிரிலும் மேலாக நேசித்து, அந்த இலட்சியத்திற்காகப் போராடி மடிந்த எமது தேசத்தின் விடுதலை வீரர்களை இன்று நாம் எமது இதயத்துக் கோயில்களில் சுடரேற்றிக் கௌரவிக்கிறோம். எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள்…