தோழர் தியாகு எழுதுகிறார் : ஆயுதப் போராட்டமா? உற்பத்திப் பெருக்கமா?
(தோழர் தியாகு எழுதுகிறார் : பொதுவுடைமைப் பாதைக்குத் திரும்பினேன்- தொடர்ச்சி) கீற்று நேர்காணல் (1.3) தோழர் தியாகு எழுதுகிறார் ஆயுதப் போராட்டமா? உற்பத்திப் பெருக்கமா? அந்த நேரத்தில் தஞ்சையில் மூப்பனாரின் மாந்தோப்பில் ஒரு பயிலரங்கம் நடைபெற்றது. அதில் சி. சுப்பிரமணியம் பேசினார். உற்பத்திப் பெருக்கம்தான் சோசலிசத்திற்கான வழி என்பதுதான் அதன் சாறம். நிலச் சீர்திருத்தம்தான் முதலில் செய்ய வேண்டியது என நான் அவரிடம் வாதிட்டேன். அவர் சோவியத்து உருசியாவை ஒப்பிட்டுப் பேசினார். சோவியத்து உருசியாவில் எல்லாச் சீர்திருத்தத்திற்கு முன்பும் நிலச்சீர்திருத்தம் நடைபெற்றதாக நான் குறிப்பிட்டேன். நம் ஊரிலும்…