உலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்
சென்னை மணியம்மையார் குளிரரங்கத்தில் கார்த்திகை 01, 2050 / நவம்பர் 17 அன்று முற்பகல் உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் 110ஆவது பிறந்த நாள் பெருமங்கலநாள் விழாவும் தமிழ் அமைப்புகளால் கொண்டாடப்பட்டன. இசைக்கடல் ஆத்துமநாதன் மாணாக்கர் இசைமணி சத்தியசீலன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். தொடர்ந்து உலகத்தமிழர் பேரவையின் தலைவர் திரு அக்னி சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்க்காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன், விழாவின் நோக்கங்களையும் தமிழ்ப்போராளி இலக்குவனாரின் தொண்டறங்களையும் பணிச்சிறப்புகளையும் தமிழ்காப்புப் போராட்டங்களையும் குறிப்பிட்டுத் தலைமையுரை ஆற்றினார். உயர்தனிச் செந்தமிழை உலகெங்கும் பரப்புவோம்! என்னும் தலைப்பில்…
உலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி
உலகத்தமிழ்நாளை முன்னிட்டு நடத்தப்பெறும் கட்டுரைப்போட்டிக்கான கட்டுரைகளை வரும் 14ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும். மின்வரி – thamizh.kazhakam@gmail.com பத்து முதல் பரிசுகள், 20 இரண்டாம் பரிசுகள். அகவை, படிப்பு வேறுபாடின்றி யாவரும் பங்கேற்கலாம்.