உலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா
ஆனி 08, 2050 / ஞாயிறு / 23.06.2019 திருவள்ளுவர் சிலை திறப்பு விழா பாராட்டு விழா விருது வழங்கல் விழா நூல் வெளியீட்டு விழா பரிசளிப்பு விழா 39 ஆம் ஆண்டுஐம்பெரு விழா அழைத்து மகிழ்வோர் முனைவர் நயம்பு அறிவுடைநம்பி, தலைவர் புலவர் செ.பாபு, செயலாளர், நல்லாசிரியர் பு.புருடோத்தமன், பொருளாளர் திருக்குறள் புரவலர்கள் ஊர்ப் பொதுமக்கள் உலகத் திருக்குறள் பேரவையினர், நயம்பாடி (இரெ.)
பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் மாதம்தோறும் முப்பது சொற்பொழிவுகள்
பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் மாதம்தோறும் முப்பது சொற்பொழிவுகள் பெரும்புலவர் இ.மு.சுப்பிரமணியன் 1934ஆம் ஆண்டு உருவாக்கிய ‘சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம்’ முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு செல்லப் பாண்டியன் தலைமையில் ‘மாநிலத் தமிழ்ச் சங்கம்’ என்னும் பெயருடன் திகழ்ந்தது. ‘பவள விழாக் கண்ட தமிழ்ச் சங்கத்தில்’ இருநூறு உறுப்பினர் செயலாற்றுகின்றனர். இரண்டாவது செவ்வாய்க் கிழமை தோறும் ‘உலகத் திருக்குறள் பேரவை’ சார்பில் திருக்குறள் ஆய்வுச் சொற்பொழிவுகள் நடைபெறும். காரி(சனி)க்கிழமை தோறும் மாலை ஆறு மணி முதல் திருக்குறள் ஒரு தொடர் சொற்பொழிவுகள்…
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து – செயராமர்
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து .. வள்ளுவன் தன்னையுலகினுக்கே தந்துவான்புகழ் கொண்டநாடென தெள்ளுதமிழ் கொண்டு செப்பிநின்றான் பாரதியும் அள்ளவள்ளக் குறையாத அமுதமாம் சுரங்கமென வள்ளுவரின் குறளெமக்கு வாய்த்தெல்லோ விருக்கிறது ! பாவளவில் குறுகிடினும் பாரெல்லாம் பயனுறவே நீழ்கருத்தைச் சொல்லியதால் நிமிர்ந்துகுறள் நிற்கிறது யார்மனதும் நோகாமல் நல்லதெலாம் சொல்லுவதால் பார்முழுக்க உள்ளாரும் பார்க்கின்றார் வள்ளுவத்தை ! சமயமெலாம் கடந்துநிற்கும் சன்மார்க்க நூலெனவே இமயமென இருக்கிறது எங்களது திருக்குறளும் சமயமெலாம் கடந்தாலும் தங்களது நூலெனவே மனமாரக் கொண்டாடி மதித்திடுவார் திருக்குறளை ! அறம்பற்றிச் சொன்னாலும் அழகாகச் சொல்கிறது…