உலகப் பண்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளே!    நடுநிலக் கடலைச் சூழ்ந்து வாழ்ந்த மக்களினம் இந்திய தீவக்குறையில் தோன்றியது என்றே தீர்மானிக்கலாம்… இத்தீவக்குறை, தென்னிந்தியாவை ஆப்பிரிக்காவோடு இணைந்திருந்ததும், சிந்துகங்கை ஆறுகளின் பள்ளத்தாக்கு அமையாத காலத்தில் கடலில் மூழ்கியதுமான குமரிக் கண்டத்தில் இருந்ததாகும். இம்மாநிலமே திராவிடரின் மூலத் தாயகமாகும். …..   …..   ….. எனவே, திராவிடப் பண்புகள் இந்திய நாகரிகத்தில் மட்டும் காணப்படவில்லை; சிறந்த நாகரிகச் சிறப்பினை அடைந்திருந்த கிரீக்கு, சுமேரியா, பாபிலோனியா, பாலினீசியா போன்ற நாடுகளிலும் மற்றும் பண்டை உலகின் நாகரீக நாடுகள் பலவற்றிலும்…