பூங்கொடி 16 – கவிஞர் முடியரசன்: உலுத்தர் தொல்லை
(பூங்கொடி 15 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல்- தொடர்ச்சி) பூங்கொடி உலுத்தர் தொல்லை கடைத்தெரு வழியே காரிகை தனியாய் ஏகின் சிற்றினம் எதம் விளைக்கும் ; 50 நாகிளம் பருவ நல்லியல் மாதர் உறுதுணை யின்றி ஊரில் வெளிச்செலின் நரியென வேட்டை நாயெனத் தொடர்ந்தே ஊறுகள் செய்யும் உலுத்தர் பல்கினர் மக்கட் பண்பு மங்குதல் கண்டோம் 55 தெக்கணம் இப்படித் தேய்வது நன்றாே ? அல்லியின் வரலாறு வளநகர் ஈங்குநான் வந்தது கேளாய் களமர் கெழுமிய கண்கவர் பொழில்சூழ் மயில்நகர்…