திருக்குறள் அறுசொல் உரை – 089. உள்பகை: வெ. அரங்கராசன்
அதிகாரம் 088. பகைத் திறம் தெரிதல் தொடர்ச்சி 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 089. உள்பகை வெளியில் தெரியாமல், மனத்துள்ளே ஒளிந்துஇருந்து, அழிக்கும் கொடும்பகை நிழல்நீரும், இன்னாத இன்னா; தமர்நீரும், இன்னாஆம் இன்னா செயின். நோய்தரும் நிழல்நீரும், தீமைதான்; நோய்தரும் உறவும், தீமைதான். வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக, கேள்போல் பகைவர் தொடர்பு. வெளிப்பகைக்கு அஞ்சாதே; உறவுபோல் நடிக்கும் உள்பகைக்கு அஞ்சு. உள்பகை அஞ்சித் தன்காக்க, உலை(வு)இடத்து,…