வள்ளுவர் சொல்லமுதம் 16: அ. க. நவநீத கிருட்டிணன்: ஊக்கமும் ஆக்கமும்
(வள்ளுவர் சொல்லமுதம் 15: அ. க. நவநீத கிருட்டிணன்: பொருளும் அருளும்-தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்கக ஊக்கமும் ஆக்கமும் வினை செய்தற்கண் கொள்ளும் உள்ளக் கிளர்ச்சியே ஊக்கம் எனப்படும். ஊக்கமே வாழ்வில் உயர்வைத் தருவது. ஆதலின் ‘ஊக்கமது கைவிடேல்‘ என்று ஓதுவார் தமிழ் மூதாட்டியார். ஊக்கம் உடை யவர் எல்லாம் உடையவர் என்றே சொல்லப் பெறுவர். ஊக்கம் இல்லாதவர் என்னுடையரேனும் இலர் என்பர் வள்ளுவர். – ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைபெற்ற செல்வம். பிற செல்வங்களை இழப்பினும் ஊக்கத்தின் உறுதுணையால் அவற்றைப் பெறலாம். ஊக்கம் இல்லாதார்…