விருட்சம் இலக்கியச் சந்திப்பு : சத்தியானந்தன்

  புரட்டாசி 30, சனி 15.09.2018  மாலை 6.00 விருட்சம் இலக்கியச் சந்திப்பு : சத்தியானந்தன்  சிறப்புரை : சத்தியானந்தன் [புனைகதையாளர், கவிஞர்,  புதின எழுத்தாளர், கட்டுரையாளர்] திரைப்படம், தொலைக்காட்சி ஊடகம் தரும் துய்ப்பறிவும் வாசிப்பின் மேன்மையும்   சிரீராம் குழும அலுவலகம் மூகாம்பிகை வளாகம், ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004  (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே) அன்புடன் அழகியசிங்கர் 9444113205 அரங்கம் அடைய  

தொல்லைக்காட்சிகள் வேண்டா! – மறைமலை இலக்குவனார்

தொல்லைக்காட்சிகள் வேண்டா!     ஊடகம் என்பது மிகவும் ஆற்றல் வாய்ந்தது.  மனித மனங்களை ஊடுருவித் தாக்கும் மின்சாரம் போன்றது.  தனி மனித மனங்களை மட்டுமன்று ஒரு சமுதாயத்தின் போக்கையே மாற்றிக் காட்டும் பேராற்றல் வாய்ந்தது என்பதனை வியத்துநாம் போர் முதல் சிரியாத்து தாக்குதல் வரை நிகழ்ந்த நிகழ்வுகள் மெய்ப்பித்துள்ளன. இதனால் ஊடகங்கள் பெரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டியுள்ளது.பெரும்பான்மையும் அத்தகைய பொறுப்புணர்வை நம் நாட்டு ஊடகங்களிடம் நன்கு காணமுடிகிறது.   சில சமயங்களில் பரபரப்புக்காக சிறிய செய்திகள்தானே என்று ஒளி/ஒலிபரப்பிவிட்டால் அவற்றின் தாக்கம் பேரளவில்…

தமிழ்நலன் காக்கும் பொறுப்பு ஊடகத்துறையினரிடமே உள்ளது! – இலக்குவனார்திருவள்ளுவன்

தமிழ்நலன் காக்கும் பொறுப்பு ஊடகத்துறையினரிடமே உள்ளது!     எங்கெங்கு காணினும் தமிழ்க் கொலை என்பதே இன்றைய ஊடகங்களின் நிலைப்பாடாக உள்ளது. தமிழ் அழியாமல் காக்கப்படவும் தமிழர்நலன் பேணப்படவும் உலெகங்கும் தமிழர்கள் உரிமையுடன் வாழ்ந்திடவும் ஊடகத்துறையினர் முயன்றால்மட்டுமே இயலும்.   நல்லதமிழில் பேசுநரும் எழுதுநரும் இருப்பினும் நற்றமிழ்ப் படைப்புகளை வெளியிடும் இலக்கிய இதழ்கள் வரினும் நற்றமிழ் பரவுவதற்குப் பெரும்பாலான ஊடகங்கள் துணை நிற்பதில்லை. துணை நிற்காததுடன் தமிழ்க் கொலைகளை அரங்கேற்றுவைதயே முழுநேரச் செயல்திட்டமாகக் கொண்டுள்ளன. எனவேதான் தமிழறிஞர்களின் அரும்பணிகளும் தமிழன்பர்களின் தடையிலா முயற்சிகளும் விழலுக்கு…

கண்ணுக்குத்தெரியும் கடவுள்கள் – தங்கர்பச்சான்

  நாட்டில் உள்ளத் துறைகளிலேயே முதன்மையானதாகக் கருதப்படுவது ஊடகத்துறை. மக்களாட்சியில் வாழ்கின்ற மக்களுக்கு வழிகாட்டுவதுடன் சமூகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய பொறுப்பும் கடமையும் அவற்றுக்கு உண்டு. நாம் தேர்ந்தெடுத்த அரசு நமக்கு அரணாக இருக்க வேண்டியதுபோல் ஊடகங்களும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் அரணாக இருக்க வேண்டும். கற்றவர்களும் பாமரர்களும் நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள ஊடகங்களையே நம்பி இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையின் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்து கொண்டு வருவதுபோல் ஊடகங்களின் மீதும் இழந்து வருவது பெரும் கவலைக்குரியது. சமூகத்தின் சீர்கேடுகளை அலசும் ஊடகங்கள் தாங்கள் வழி…

செஞ்சீனா சென்றுவந்தேன் 15 – பொறி.க.அருணபாரதி

       (புரட்டாசி 12, 2045 / 28 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி) 15.சீனாவில் “ஊடகங்கள்”   சாலையோரம் சில இடங்களில் இதழ்களும், நாளேடுகளும் விற்பனை ஆகிக்கொண்டிருந்ததைப் பார்த்தென். ஊடகச்சுதந்திரம் இல்லாதநாடு சீனா என்கிறார்களே, இங்கு எப்படி ஊடகஇதழ்கள் விற்கின்றன என வியப்போடு பார்த்தேன். நான் பார்த்தவகையில், அவற்றுள் பெரும்பாலானவை திரைப்படம், நவநாகரிகச் சீனப்பெண்களின் உடைகள் குறித்துப் பேசும் புதுப்பாணி வடிவமைப்புகள், கடைவணிகம், செய்திகள் என பரவிக்கிடந்தன. அரசியல் பற்றி பேச, அரசின் ஏடு மட்டுமே! அதிலும் சில விதிவிலக்குகள் உண்டென்றால், அது அரசு…