திருக்குறள் அறுசொல் உரை: 133. ஊடல் உவகை : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 132. புலவி நுணுக்கம்: தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 3.காமத்துப் பால் 15. கற்பு இயல் 133. ஊடல் உவகை கூடல் இன்பத்தைக் கூட்டும் ஊடல் பற்றிய உளமகிழ்ச்சி. (01-04 தலைவி சொல்லியவை) இல்லை தவ(று)அவர்க்(கு) ஆயினும், ஊடுதல் வல்லது அவர்அளிக்கும் ஆறு. தவறுஇல்லை எனினும், இன்பத்தைக் கூட்டவே, அவரோடு ஊடுவேன். உடலில் தோன்றும் சிறுதுனி, நல்அளி வாடினும், பாடு பெறும். ஊடல்தரும் சிறுதுயரம் வாட்டினும், கூடல் இன்பத்தைப்,…