பூங்கொடி 10 – கவிஞர் முடியரசன்: ஊரார் பழிமொழி
(பூங்கொடி 9 – கவிஞர் முடியரசன்: அருண்மொழியின் இசைப்புலமை- தொடர்ச்சி) பூங்கொடி பழியுரை காதை ஊரார் பழிமொழி இசைத்தொழில் புரியும் இவள் இத் தொழிலை வசைத்தொழில் என்று வெறுத்திடல் என்கொல் ? 35செருக்கினள் கொல்லோ செல்வம் மிகவாய்ப் பெருக்கினள் கொல்லோ ? என்றுரை பேசி ஏளனம் செய்தனர் என்ற கேன்மொழிக்கு அருண்மொழி அலருக்குக் கூசாமை அருண்மொழி நகைத்தனள் அருளினள் சிலசொல்; பொதுப்பணி புரிவோர் புகழ்வும் இகழ்வும் 40 நினைத்திடல் வேண்டும் ஒருநிகர் எனவே; ஆருயிர்த் தோழி! அந்நாள் வடிவேற் பேருடைச் செம்மலைப் பேணிஎன் காதற்…