முதலக்கம்பட்டியில் ஊர் நிருவாக அலுவலர் அலுவலகத்தைத் தேடி அலையும் பொதுமக்கள்   தேவதானப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டியில் ஊர் நிருவாக அலுவலகம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். முதலக்கம்பட்டி ஊராட்சிக்குற்பட்ட வைகை புதூர், சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி முதலான ஊர்களுக்கு ஊர் நிருவாக அலுவலகம் முதலக்கம்பட்டியில் உள்ளது.  முதலக்கம்பட்டியில் ஊ.நி.அ.திகாரி அலுவலகத்திற்குக் கட்டடம் இ;ல்லை. இதனால் ஊ.நி.அ. அலுவலகக் கட்டடம் வருடத்திற்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சமுதாயக்கட்டடத்தில் இயங்கியது. அதன்பின்னர் அக்கட்டடம் புறநூலகமாக மாற்றப்பட்டது. அதன்பின்னர் ஊர் வறுமை ஒழிப்புச் சங்கத்திற்குச்…