திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 038. ஊழ்
(அதிகாரம் 037. அவா அறுத்தல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 04. ஊழ் இயல் அதிகாரம் 038. ஊழ் உலக இயற்கை முறைமைகளை, உணர்ந்து, தக்கபடி நடத்தல்ஆம். ஆ(கு)ஊழால், தோன்றும் அசை(வு)இன்மை; கைப்பொருள், போ(கு)ஊழால் தோன்றும் மடி. ஆகுசூழல் ஊக்கத்தால், பொருள்ஆம்; போகுசூழல் சோம்பலால் பொருள்போம். பேதைப் படுக்கும், இழ(வு)ஊழ்; அறி(வு)அகற்றும், ஆகல்ஊழ் உற்றக் கடை. அழிவுச் சூழலில் அறியாமைஆம் ஆக்கச் சூழலில் அறிவுஆம். நுண்ணிய நூல்பல கற்பினும், மற்றும்,தன்…