ஆட்சி நிலைக்கத் தமிழை நிலைக்கச் செய்வீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(தயிருக்குப் பொங்கிய முதல்வர் எல்லாவற்றிற்கும் பொங்க வேண்டும்!: தமிழுக்குச்செய்ய வேண்டிய ஆயிரம் 24 –தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 25 – ஆட்சி நிலைக்கத் தமிழை நிலைக்கச் செய்வீர்! எழுதவே வெட்கப்படுகிறோம்! வேதனைப்படுகிறோம்! எத்தனை முறைதான் அரசின் ஆங்கிலத்திணிப்பைக் குறித்து எழுதுவது? இரு நாள் முன்னர்ப் பிறப்பித்த இ.ஆ.ப. அலுவலர்கள் மாறுதல் ஆணை கூட ஆங்கிலத்தில்தான். பொதுத்துறை உட்பட எல்லாத்துறைகளிலும் தமிழ் ஈடுபாடு மிக்கவர்களையே அரசு செயலர்களாக அமர்த்தினால்தான் தமிழைக் காண முடியும். ஆங்கிலத்தைத் திணிப்பதற்கு அவர்கள் வெட்கப்படாமல் இருக்கலாம். வேதனை உறாமல்…