கருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்! – இலக்குவனார் திருவள்ளுவன்
கருநாடகாவில் கருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்! 15 நாள் கால வாய்ப்பில் ச.ம.உ.களை வாங்கி ஆட்சியைச் சிக்கலின்றி அமைக்கலாம் எனப் பாசக திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் 24 மணி நேர வாய்ப்பே அளித்தமையால் பேர வணிகத்திற்கு வாய்ப்பில்லாமல் போனது. இச்சூழலை எதிர்பார்த்தே எடியூரப்பா விலக வேண்டும் என நேற்று குறிப்பிட்டிருந்தோம்,( எடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும். ) மோசமான தோல்வியை வெளிப்படுத்துவதை விட விலகுவதே மேல் எனக் குறுக்கு வழியில் கருநாடகாவின் முதல்வராகப் பொறுப்பேற்ற…
எடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்
எடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும்! கருநாடக முதல்வர் எடியூரப்பா நாளை (19.05.2018) மாலை 4.00மணிக்கு நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்ற நலல தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவிததுள்ளனர். உச்ச மன்ற நீதிபதிகள் ஏ,கே.சிருகிரி(AK Sikri ), சரத்து அரவிந்து போபுதே (SA Bobde ) அசோக்கு பூசன்( Ashok Bhushan) ஆளுநர் பதவிக்கு மதிப்பளித்து அதே நேரம் மக்களாட்சி மாண்பு காக்கப்படவேண்டும் எனச் சரியாகத் தீர்ப்பு வழங்கியுள்ளனர். யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத பொழுது…