தேனிச்சந்தையில் எடைமோசடி
தேனிப்பகுதியில் நடைபெறும் வாரச்சந்தையில் எடைமோசடி நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பகுதியில் நடைபெறும் வாரச்சந்தையில் எடைமோசடி நடைபெறுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேவதானப்பட்டி வாரச்சந்தை வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும். இதனையொட்டி எருமலைநாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், புல்லக்காபட்டி, மஞ்சளாறு அணை, காமக்காபட்டி முதலான பல ஊர்களில் இருந்து தங்களுடைய வாரத்தேவைகளுக்கான காய்கறிகள், பருப்புவகைகள், கிழங்கு வகைகள், ஒன்பான்கூலங்களை(நவதானியங்களை) வாங்கிச்செல்வார்கள். வாரச்சந்தைக்கு கொடைக்கானல், வத்தலக்குண்டு, ஆண்டிபட்டி, கம்பம், போடி, பாளையம் முதலான பகுதிகளில் இருந்து ஏராளமான காய்கறி வணிகர்கள் வருகை…