கலைச்சொல் தெளிவோம்! 96. எண் வெருளி-Arithmophobia
கலைச்சொல் தெளிவோம்! 96. எண் வெருளி எண்(19), எண்கை(1), எண்பதம்(1), எண்பேரெச்சம் (2), எண்மர்(2) என எண்ணிக்கை தொடர்பான சொற்களைச் சங்கப்பாடல்களில் காணலாம். எண் என்பது எண்ணிக்கை பொருளுடன், எட்டு என்ற எண்ணிக்கை, எளிமை ஆகிய பொருள்களையும் தரும் வகையில் சொற்கள் உள்ளன. எண்களைப் பற்றியும் சிலர் அஞ்சுவர். இவ்வாறு எண் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம், எண் வெருளி-Arithmophobia – இலக்குவனார் திருவள்ளுவன்