வள்ளுவர்  வேள்விக்கு எதிரான எதிர்ப்புக் குரலை எழுப்பினார்   வேள்விகளைச்செய்து ஆற்றலைப் பெறலாம். அடைதற்கரியனவற்றை அடையலாம் என்ற கூற்றில் மயங்கி வேள்வியை அறியாத் தமிழ்நாட்டில் வேள்வி செய்தலைப் பெருங்கடனாகச் செய்தனர் சிலர். தமிழரசர்களில் சிலர் எளிதில் எதையும் பெறலாம் என்று எண்ணி வேள்விகளைச் செய்வதற்கு ஊக்கமும் ஆக்கமும் அளி்த்தனர். பல வேள்விகைளச்செய்த அரசர்க்குப் பல்வேள்வி செய்தான் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பதே சான்றாகும்.  அவ்வேள்விகளில் ஆடு, மாடு, குதி்ரைகளைக் கொன்றனர். மக்கள் நலன்அடைய மாக்களைக் கொல்லுதல் அறமாகுமா?  பேரருளாளர் வள்ளுவர்…