என் பா ! இயற்றுகின்ற என்பாக்கள் எதுகை மோனை இயல்பாக அமைந்திருக்கும் இன்பப் பாக்கள்! வயல்வெளியில் விளைந்திருக்கும் பயிரைப் போல, வலிமைதரும் வளமைதரும் படிப்போர்க் கெல்லாம்! குயவன்செய் பாண்டமல்ல கருக்கா வெள்ளி! குடங்குடமாய்த் தங்கத்தை உருக்கி வார்த்த உயர்அணிகள் எனும்வைரம் பதித்த பாக்கள்! உயர்எண்ணம் அழகாக ஒளிரும் பாக்கள்! குமுகாய மீட்சிகளைக் கூறும் பாக்கள், கொடியோரின் தீப்போக்கைக் குட்டும் பாக்கள்! அமுங்கிவரும் அடித்தட்டு மக்கள் நன்மை அடைதற்கு முழக்கமிடும் அன்பு வெள்ளம்! உமிமூட்டை அடுக்கிவைத்தே அரிசி என்பார்! உதவாத சொல்லடுக்கிப் பாக்கள் என்பார்! தமிழ்க்கொலையைச்…