வெள்ளம்  வடிந்தோட வேதனையும் விரைந்தோட உள்ளமெலாம் உற்சாகம் ஊற்றெடுத்து நின்றிடட்டும் நல்லவை நம்வாழ்வில் நாளும்வர வேண்டுமென்று நாம்பொங்கி மகிழ்ந்திடுவோம் நம்வாழ்வு விடிந்திடட்டும் ! இயற்கை தந்தவிடர்கண்டு ஏக்கமுற்று விழுந்திடாமல் முயற்சியுடன் உதவிநின்றார் முழுமனதை வாழ்த்திநின்று அயற்சிதனை விட்டெறிந்து அனைவருமே அணைந்துநின்று உயற்சிதர வேண்டுமென்று உளமாரப் பொங்கிநிற்போம் ! நீர்பெருகி நின்றதனால் நீரருந்த முடியாமல் ஊர்மக்கள் யாவருமே உயிர்துடித்து நின்றார்கள் நீர்வற்றிப் போனாலும் நிம்மதியைத் தேடுமவர் சீர்பெற்று வாழ்வதற்கு இப்பொங்கல் உதவிடட்டும் ! மார்கழி மாதமது மனங்குளிர வைத்தாலும் மாமழையும் பேரழிவும் மனம்வருந்தச் செய்ததுவே…