எல்லாளன் ஆள்வார் – தமிழ் மகிழ்நன்

சிங்களன்நீ தமிழன்நான் தீங்கெமக்குச் செய்தாய்! சிங்களமே உன்நாடு! நாடெமெக்கு ஈழம்! கங்குலென்றும் பகலென்றும் பாராது நின்று காட்டினிலும் களத்தினிலும் கடுந்துன்பம் வென்று பொங்கிவரும் காட்டாறு போல்புலிகள் வருவார்! புத்துயிரை ஊட்டியினி புதுயீழம் பெறுவார்! மங்கிடாத புகழுடைய தமிழீழ நாடு மாவீரர் படைத்திடுவார் நடுங்கியினி ஓடு! முள்ளி வாய்க்கால் போர்முனையில் முழுவெற்றி என்றே மூர்க்கன்நீ முதிர்ச்சியின்றி முழங்குகிறா யின்று! கள்ளரைப்போல் வல்லரசர் களமாட வென்றாய்! கதறிநீயும் அழுதலறித் தோற்றோடி வீழ்வாய்! வெள்ளம்போல் மாவீரர் விளைகின்ற மண்ணில் வீணன்நீ வெகுவிரைவில் வீழ்ந்தழிவாய் எண்ணு! துள்ளுகின்ற சிங்களனுன் துடுக்குயினி…

எல்லாளன் வாழ்க! –

– திருக்குறள் பாவலர் தமிழ்மகிழ்நன் 92802 53329   எல்லாளன் இருக்கின்றார் எல்லாரும் அறிக ஈழத்தின் இடர்நீக்க  ஈங்கெழுந்தார் தெளிக! “இல்லையினி எல்லாளன்” என்று சொல்லு மெதிரி இடந்தேடி ஓடும்நாள் இனிவிரைவில் வருமே!