கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 74 : 15. இசைத்திறம் உணர எழுந்த காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 73 : ஏமகானன் தூண்டு மொழி-தொடர்ச்சி) பூங்கொடி இசைத்திறம் உணர எழுந்த காதை அடிகளார் ஆணை பூங்கொடி யாகிய பொற்புடைச் செல்வி ஆங்கண் மீண்டதும் அருண்மொழிக் குரைப்போள் `மீனவன் திறமெலாம் விளம்பித் தமிழால் ஆன நல்லிசை யாண்டும் பரவிடச் சுவடியின் துணையால் தொண்டியற் றென்று 5 தவறிலா அடிகள் சாற்றினர்’ என்றனள்; அருண்மொழியும் இசைதல் `ஆம்என் மகளே! அதூஉஞ் சாலும் தோமறு தமிழிசை துலங்குதல் வேண்டி மீண்டும் அப்பணி மேவுதல் வேண்டும்; பூண்டநல்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 2, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 2 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். (திருக்குறள் 17) ஆழமும் அகலும் உள்ள பரந்து விரிந்துள்ள அளவில்லாத கடலும் தன் நீர் வளத்தில் குறைந்து போகும். எப்பொழுது? எப்படி? அக்கடலில் இருந்து நீர் மேலே சென்று மழையாகி மீண்டும் அக்கடலுக்கு நீரை வழங்காவிட்டால் கடல் தன்…
கலைச்சொல் தெளிவோம்! 68. எழிலி-nimbostratus
68. எழிலி-nimbostratus முகிலியல் (science of clouds) முகில் கூட்டங்களை முகில் (அல்லது மேகம்) என்றே நாம் வேறுபாடு அறியாமல் கூறுகிறோம். கிளெடு (cloud) எனில் முகில் என மனையறிவியலிலும், முகில், மேகம் எனப் பொறிநுட்பவியல் புவியறிவியல் ஆகிய துறைகளிலும் கொண்டல், மேகம் என வேளாணியலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. வான் மழை பெய்யும் முகில் கூட்டம் பல வகையாய் உள்ளது என 19ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். ஆவர்டு (Luke Howard 1772-1864) என்னும் பிரித்தானிய அறிஞர் வெவ்வேறு வகை முகில் கூட்டம்…